Ind vs SA: சொதப்பிய பவுலர்கள்! தனி ஆளாய் காப்பாற்றிய பும்ரா! இந்திய அணிக்கு இமாலய இலக்கு..
IND vs SA : இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணிக்கு 188 ரன்கள் என்கிற இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக தொடங்கிய இந்தியா:
அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது, தொடக்க ஆட்டக்காரர்களாக எய்டன் மார்க்ரம் மற்றும் குயிண்டன் டி காக் களமிறங்கினர். குயிண்டன் டி காக் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார். இதன் பின்னர் அர்ஷ்தீப் கேப்டன் மார்க்ரம் மற்றும் ரிக்கில்டன் ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார், இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மிரட்டிய மில்லர்-பிரேவிஸ்:
அணியை சரிவில் இருந்து மீட்க டிவால்ட் பிரேவிஸ்சுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். முதல் பந்தில் இருந்தே மில்லர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார், பவர்பிளே கடந்தவுடன் இருவரும் சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை டிவால்ட் பிரேவிஸ் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார்.இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேல் சென்றது.
கம்பேக் கொடுத்த இந்தியா:
ஒரு கட்டத்தில் இந்த ஜோடி ஆடிய விதத்தை பார்த்த போது தென் ஆப்பிரிக்க அணி 200 ரன்களை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கபட்டது, ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பை சிவம் துபே முறியடித்தார், 46 ரன்கள் எடுத்த நிலையில் பிரேவிஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது. பும்ரா சிக்கனமாக பந்துவீசி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்தது.
பும்ரா சாதனை:
இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் தனது 33-வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டி20 உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற ரவிச்சந்திரன் அஷ்வினின் சாதனையை (32 விக்கெட்டுகள்) பும்ரா முறியடித்தார்.





















