ச்ட்


இந்தியா - தென்னாப்பிரிக்க டெஸ்ட்:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 


அதன்படி சென்சுரியனில்  நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இதில் 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஜஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் சொதப்பினாலும்,  அடுத்து வந்த விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தனர். பின்னர், களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அந்த வகையில்,  137 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். 


 


அதனைத்தொடர்ந்து விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்தது. இதில், தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிய ஐடன் மார்க்ராம் 5 ரன்களில் நடையைக்கட்டினார். மறுபுறம் பொறுமையாக விளையாடிய டீன் எல்கர் சதம் விளாசினார்.


அதன்படி, 287 பந்துகள் களத்தில் நின்ற அவர் 185 ரன்களை எடுத்தார். அதோடு டேவிட் பெடிங்காம் 56 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக 108. 4 ஓவர்கள் களத்தில் நின்ற அந்த அணி மொத்தம் 408 ரன்கள் எடுத்தது. 


 


பின்னர் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய  ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரோகித் சர்மா சற்றும் எதிர்பாரா விதமாக ரபாடா பந்தில் டக் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் 5 ரன்களும் சுப்மன் கில் 76 ரன்களும் எடுக்க அடுத்து வந்த விராட் கோலி பொறுமையாக அணிக்கு ரன்களை சேர்த்தார். 


தென்னாப்பிரிக்கா வெற்றி;


ஸ்ரேயஸ் அய்யார், கே.எல்.ராகுல், அஸ்வின், தாகூர், பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, மறுபுறம் நிதானமாக விளையாடிய இந்திய அணி வீரர் விராட் கோலி 82 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸில் 131 ரன்கள் எடுத்தது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.