IND vs SA 1st ODI LIVE Score: போராடித் தோற்ற இந்தியா! சஞ்சு சாம்சனின் முயற்சி வீண்!

IND vs AUS, 1st ODI, Ekana Sports City: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடித் தோற்றுள்ளது.

ABP NADU Last Updated: 07 Oct 2022 09:08 AM
தி.மு.க. தலைவர் பதவிக்கு இன்று மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல்

தி.மு.க. தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். 

சஞ்சுவைக் கண்டு அஞ்சிய தெ. ஆ; 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது இந்தியா!

பரபரப்பன 40வது ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அதில் 20 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்த போட்டியில் போராடித் தோற்றுள்ளது. 

சஞ்சுவைக் கண்டு அஞ்சிய தெ. ஆ; 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது இந்தியா!

பரபரப்பன 40வது ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அதில் 20 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்த போட்டியில் போராடித் தோற்றுள்ளது. 

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை; களத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் என்ன செய்ய போகிறார்.?

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைபடுகிறது.  களத்தில் இருக்கும்  சஞ்சு சாம்சன் என்ன செய்ய போகிறார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

பரபரப்பான 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள்!

பரபரப்பான 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா மீண்டும் தடுமாற்றம் அடைந்துள்ளது. வெற்றி பெற இரண்டு ஓவர்களில் 37 ரன்கள் அடிக்க வேண்டும். 

வெற்றி பெற ஓவருக்கு 15 ரன்கள் வேண்டும்; வெல்லுமா இந்தியா?

போட்டியை வெல்ல கடைசி மூன்று ஓவர்களில்  15 ரன்கள் தேவைப்படுகிறது. 

தோல்வியை தவிர்க்க போராடி வரும் சஞ்சு சாம்சன்!

தோலிவியை தவிர்க்க தனி நபராக சஞ்சு சாம்சன் போராடி வருகிறார். அவர் 49 பந்துகளில் 50 ரன்கள் அடித்துள்ளார். 

36 பந்தில் 81 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா இந்தியா!

முதலாவது ஒருநாள் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 34 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது. 

150 ரன்களை 32 ஓவரில் கடந்து தடுமாறும் இந்தியா வெற்றி பெறுமா?

32வது ஓவரில் 150 ரன்களை கடந்துள்ள இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. 

அதிரடியாக ஆடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் நெகிடி பந்தில் அவுட்!

தடுமாறி வந்த இந்திய வீரர்களுக்கு மத்தியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஸ்ரேயஸ் ஐயர் அவுட் ஆகியுள்ளார். இந்தியா தற்போது ஐந்து விக்கெட்டுகள் இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது. 

அதிரடியாக ஆடிவந்த ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம்!

அதிரடியாக ஆடிவந்த ஸ்ரேயஸ் ஐயர் 33 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஐந்தாவது விக்கெட்க்கு கை கோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 50 பந்துகளில்  67 ரன்கள் குவித்துள்ளனர். 

போராடி 100 ரன்களை அடைந்த இந்தியா!

23 ஓவர்களில் நான்கு விக்கெட்க்கு 106 ரன்களை இந்தியா அடைந்துள்ளது. 

இஷான் கிஷனும் அவுட்!

37 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த இஷான் கிஷன் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இந்தியா 51-4 என்ற நிலையில் தடுமாறி வருகிறது. 

கியரை மாற்றுவாரா ஸ்ரேயஸ்!

நான்காவது விக்கெட்டிற்கு களம் இறங்கியுள்ள ஸ்ரேயஸ் ஐயர் தடுமாறி வரும் இந்தியாவை மீட்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

தடுமாறி வந்த கெய்க்வாட் அவுட்!

தடுமாறி வந்த கெய்க்வாட்  42 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஷம்ஷி பந்தில் அவுட்  ஆகி வெளியேறுகிறார். 

15 ஓவர்கள் கம்ளீட்; தொடர்ந்து தடுமாறும் இந்தியா!

15 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 45 ரன்களே எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 150 பந்துகளில் 205 ரன்கள் எடுக்க வேண்டும். 

15 ஓவர்கள் கம்ளீட்; தொடர்ந்து தடுமாறும் இந்தியா!

15 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 45 ரன்களே எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 150 பந்துகளில் 205 ரன்கள் எடுக்க வேண்டும். 

பத்து ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா தடுமாற்றம்!

பத்து ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா தடுமாறி வருகிறது. 

முதல் ஐந்து ஓவரில் மூன்று ஓவர் மெய்டண்! தடுமாறும் இந்தியா! செக் வைக்கும் தெ. ஆ!

தெ. ஆவின் அபார பந்து வீச்சில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் ஐந்து ஓவரில் மூன்று ஓவர் மெய்டண்.

ரபாடாவின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆன சுப்மன் கில்!

தெ. ஆப்ரிக்காவின் ரபாடாவின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி 3 ரன்கள் மட்டுமே எடுத்து சுப்மன் கில் வெளியேறினார். 

250 ரன்கள் இலக்கினை நோக்கி இந்தியா களம் இறங்கியுள்ளது!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 250 ரன்கள் இலக்கினை நோக்கி இந்தியா களம் இறங்கியுள்ளது!

இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கினை நிர்ணயித்த தெ. ஆ!

இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கினை தென் ஆப்ரிக்கா நிர்ணயித்துள்ளது. 40 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் விளாசியுள்ளது. ஐந்தாவது விக்கெட்டிற்கு கை கோர்த்த மில்லர் மற்றும் க்லாசென் அதிரடியாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். 

அடுத்தடுத்து அரைசதம் அடித்த க்லாசென் மற்றும் மில்லர்! வலுவான நிலையில் தெ. ஆ அணி!

ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்து விளையாடிய க்லசென் மற்றும் மில்லர் அடுத்தடுத்து அரைசதம் அடித்து தெ. ஆ அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.  36 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு தெ. ஆ அணி 207 ரன்கள் எடுத்துள்ளது. 

30 ஓவர்கள் முடிவில் தெ.ஆ 164-4 எடுத்துள்ளது!

30 ஓவர்கள் முடிவில் தெ.ஆ 164-4 எடுத்துள்ளது. மில்லர் மிகவும் வலுவான ஆட்டத்தினை வெளிப்படுத்திவருகிறார். 

25 வது ஓவரில் போட்டியின் முதல் சிக்ஸரை அடித்த மில்லர்!

24 ஓவர்களுக்கு பிறகு  போட்டியின் முதல் சிக்ஸரை அடித்த மில்லர். 25 ஓவர்கள் முடிவில் தெ. ஆ அணி  134-4 எடுத்துள்ளது.  

அரைசதத்தை தவறவிட்ட டி காக்! 100 ரன்களைக் கடந்த தெ. ஆ!

ஓபனராக களம் இறங்கி நிதானமாக ஆடிவந்த குயிண்டன் டி காக் 54 பந்துகளில் 48 அடித்து தனது அரைசதத்தினை தவறவிட்டுள்ளார்.  தெ. ஆ அணி 22.3ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. 

20 ஓவர்கள் முடிவில் தெ. ஆ அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

ஆரம்பம் முதலே நிதானமாக பேட்டிங் செய்து வரும் தெ. ஆ அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 92 எடுத்துள்ளது. களத்தில் டி காக் 40 ரன்களுடனும், க்லாசென் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

களமிறங்கிய வேகத்தில் நடையைக் கட்டிய மார்க்ரம்! குல்தீபின் சுழலில் டக் அவுட்!

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய வேகத்தில் நடையைக் கட்டியுள்ளார் மார்க்ரம்! இவர் குல்தீபின் சுழலில் டக் அவுட் ஆகி பெவுலியன் திரும்பினார். 72-3 என தெ. ஆ தடுமாற்றம். 

அடுத்தடுத்த ஓவர்களில் செக் வைத்த சர்ஹுல் தாக்கூர்! 70 ரன்களில் 2 விக்கெட்டை இழந்த தெ. ஆ!

அடுத்தடுத்த ஓவர்களில் செக் வைத்த சர்ஹுல் தாக்கூர்! 15 ஓவர்கள் முடிவில் 70 ரன்களில் 2 விக்கெட்டை இழந்த தெ. ஆ. 

14 ஓவர் முடிவில் தெ.ஆ ஒரு விக்கெட் இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது!

நிதானமாக பேட்டிங் செய்து வரும் தெ.ஆ 14 ஓவர் முடிவில்  ஒரு விக்கெட் இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது.  நிதானமக ஆடி வந்த மாலன் சர்ஹுல் தக்கூர் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். 

பத்து ஓவர்கள் முடிவில் 41 ரன்கள் எடுத்துள்ள தெ. ஆ!

ஆட்டம் தொடங்கியது முதலே நிதானமாக ஆடிவரும் தென் ஆப்ரிக்கா முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் எடுக்க முடியாமல், இந்தியா தவித்து வருகிறது. 

பவர் ப்ளேயில் 28 ரன்கள் மட்டுமே எடுத்த தெ. ஆ!

40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி பவர் ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.  

தெ.ஆ நிதான ஆட்டம்! ஐந்து ஓவர்களில் 18 ரன்கள்!

40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில் தெ. ஆ ஐந்து ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. 

பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்ரிக்கா! யாருக்கு கை கொடுக்கும் வானிலை?

தென் ஆப்ரிக்காவின் மாலன் மற்றும் டி காக் பேட்டிங்கை தொடங்கியுள்ளனர். முகமது சிராஜ் முதல் ஓவரை வீசுகிறார். 

40 ஓவராக குறைக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு!

லக்னோவில் மழையால் பாதிக்கப்பட்ட  இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் மீண்டும் மழை..! 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டி நடக்குமா?

லக்னோவில் பெய்து வரும் தொடர் மழையால் 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டி மீண்டும் மழையால், தாமதமாக தொடங்கவுள்ளது. 

இன்னும் சற்று நேரத்தில் டாஸ்! டாஸை வெல்லுமா இந்தியா!

மழையால் தடைபட்டு வந்த இந்தியா தென் ஆப்ரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள்  போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. 

Background

IND vs SA 1st Oneday: இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதற்கு பிறகு, ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 


இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 3.45 மணிக்கு லக்னோவில் தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக தாமதமாக போட்டி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்தியா தென் ஆப்ரிக்க அணிகள், இது வரை 87 போடிகளில் நேரடியாக மோதியுள்ளன. இதில் இந்திய அணி 35 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 49 போட்டிகளிலும் வென்றி பெற்றுள்ளன. மூன்று ப்போட்டிகள் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த போட்டிகளில், இந்தியாவில் நடந்த போட்டிகளில் மட்டும் இந்திய அணி  15 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல், இந்தியாவில் நடந்த போட்டிகளில் தென் ஆப்ரிக்கா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் போட்டிங்கை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி மிகவும் நிதானமாக விளையாடி வந்தது. சீரான இடைவெளில் விக்கெட்டுகள் விழுந்து வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய  குயிண்டன் டி காக் அரை சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ரவி பிஷ்னாய் பந்து வீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி, 54 பந்துக்ளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். 






மிகவும் நிதானமாக விளையாடி வந்த தென் ஆப்ரிக்க அணி சார்பில் முதல் சிக்ஸரை ஐந்தாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேவிட் மில்லர் போட்டியின் 25 ஓவரில் அடித்தார். மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  தென் ஆப்ரிக்க அணி நான்கு  விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கால் ஆரம்பத்தில் தடுமாறி வந்த தென் ஆப்ரிக்க அணி அதன் பின்னர் வலுவான நிலைக்கு வந்தது. 


தென் ஆப்ரிக்க அணியைப் பொறுத்தமட்டில் குயிண்டன் டி காக் 48 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும், க்லாசென் 74 ரன்களும் எடுத்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில், சர்ஹுல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னாய் மற்றும் குல்தீப் சிங் யாதாவ் தலா  ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கினை தென் ஆப்ரிக்கா நிர்ணயித்துள்ளது. 40 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் விளாசியுள்ளது. ஐந்தாவது விக்கெட்டிற்கு கை கோர்த்த மில்லர் மற்றும் க்லாசென் அதிரடியாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். 


40 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் பந்துகளை வீணடித்து வெளியேறினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு கை கோர்த்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. அதிரடியாக அரைசதம் கடந்த ஸ்ரேயஸ் உடனே அவுட் ஆனார். 


அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற போராடிய சஞ்சு சாம்சனின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. பரபரப்பான கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அதில் சஞ்சு சாம்சன் 20 ரன்கள் எடுத்து அணியின் தோல்வி வித்தியாசத்தினை 9 ரன்களாக குறைத்தார். சஞ்சு சாம்சன் கடைசிவரை களத்தில் நின்று 63 பந்தில் 86 ரன்கள் குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. 


தென் ஆப்ரிக்காவின் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.