IND vs PAK T20 WC 2026: சென்னை மக்கள் கவனத்திற்கு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
IND vs PAK T20 WC 2026: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இன்று மெரினாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்
விறுவிறுப்பாக நடந்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ரசிர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இரண்டு அணிகள் மோதும் போட்டி இலங்கையின் கொழும்பில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல மக்கள் கூட்டம் அங்கு அதிகமாக இருக்கும். தற்போது, கிரிக்கெட் போட்டியும் ஒளிபரப்பு செய்வதால் மெரினாவே கடலைபோல காட்சியளிக்கும்.
டி20 உலகக் கோப்பை
— Greater Chennai Corporation (@chennaicorp) February 14, 2026
இந்தியா VS பாகிஸ்தான்
நேரடி ஒளிபரப்பு!
இடம்: மெரினா
நேரம்: மாலை 7 மணி#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #MarinavilKalaivizha pic.twitter.com/5Tq3m7DzMO
இந்தியா - பாகிஸ்தான்: நேருக்கு நேர்
சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் 8 முறை மோதியதில் இந்தியா 7 வெற்றிகளை ஈட்டியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதே பாகிஸ்தானுக்கு கிடைத்த ஒரே ஒரு வெற்றியாகும்.
மழையால் ஆட்டம் பாதிக்கப்படுமா?
டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி, இருநாட்டு பிரச்னையால் முதலில் நடக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், போட்டி நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மழையால் இந்த போட்டி நடக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையில் கடும் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் போட்டி ரத்து செய்யப்படலாம். பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் மழைக்கு 55 முதல் 60 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி மழையால் போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு, இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.



















