IND vs PAK Asia Cup 2025 Final: இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
கோப்பை யாருக்கு?
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி இன்று(செப்டம்பர் 28) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியும் சல்மான் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது.
முன்னதாக மூன்று லீக் ஆட்டங்களிலும் சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அதேபோல் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் தல இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி:
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. துபாய் மைதானம் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில் தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இதனால் இந்தியாவிற்கு கோப்பை நிச்சயம் கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்திய அணி வீரர்கள்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) , சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
ஆகா சல்மான் (கேப்டன்), சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சைம் அயூப், ஹுசைன் தலாத், முகமது ஹரீஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப்,ஷாஹீன் அஃப்ரிடி,ஹரிஸ் ரவூப்,அப்ரார் அகமது