Ind vs NZ T20 WC 2026 Final: பேய் போல் பேட்டிங் செய்த இந்தியா... பதிலடி தருமா நியூசிலாந்து.., 256 ரன் டார்கெட்
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.
சேட்டா-அபிஷேக் அசத்தல்:
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணியின் ரன் கணக்கை சஞ்சு சாம்சன் சிக்சருடன் தொடங்கினார். முதல் இரண்டு ஓவர்களை பார்த்து ஆடிய அபிஷேக் சர்மா, அதன் பின்னர் தனது அதிரடி பேட்டிங் ஆரம்பித்தார் அபிஷேக் சர்மா.
சாம்சன் கிளாசிக் ஷாட்ஸ் ஆட மறுப்பக்கம் அபிஷேக் சர்மா கருணையே காட்டாமல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார், தொடர் முழுவதும் சொதப்பி வந்த அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார், பவர்பிளேவில் இந்திய அணி 92 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்தது.
பேயாட்டம் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள்
அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகு, இஷன் கிஷன் - சாம்சன் ஜோடி அதிரடியை தொடர்ந்தனர், இருவரும் மிடில் ஒவர்களில் இந்திய அணியை ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர். சாம்சன் தொடர்ந்து தனது மூன்றாவது அரைசதத்தை அடித்தார். மறுபக்கம் 23 பந்துகளில் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய சாம்சன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மோசம் பண்ண பார்த்த நீஷம்:
ஒரு கட்டத்தில் இந்திய அணி 270 ரன்களை தாண்டும் என எதிர்ப்பார்த்த நிலையில் ஜேம்ஸ் நீஷம் வீசிய 16வது ஓவரில் சாம்சன்(89), இஷான் கிஷன்(54) மற்றும் கேப்டன் சூர்யக்குமார்(0) யாதவ் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் பின்னர் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா இருவரும் பவுண்டரிகளை அடிக்க சிரம்ப்பட்டனர். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது.
துவம்சம் செய்த துபே:
பாண்ட்யா 18 ரன்களில் ஆட்டமிழக்க சிவம் துபே களமிறங்கினர், இந்திய அணியின் இறுதி ஓவரில் அதிரடி கேமியோ ஆடினார், மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் நீஷம் பந்தை அடிக்க சிரமப்பட்ட நிலையில் சிவம் துபே 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை 250 ரன்களை கடக்க உதவினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவித்தது.
இந்திய அணியில் அதிகப்பட்சமாக சாம்சம் 89 ரன்களும், கிஷன் 54 ரன்களும், அபிஷேக் சர்ம 51 ரன்கள் குவித்தனர், நியூசிலாந்து தரப்பில் நீஷம் 3 விக்கெட்டுகளும், ஹென்ரி மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















