உலகக் கோப்பை 2023 போட்டியானது கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்கி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் இன்று நியூசிலாந்துடன் போட்டியை நடத்தும் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியானது மதியம் 2 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. 

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது, ஒரு முறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணி கடைசி இரண்டு உலகக் கோப்பை பதிப்புகளிலும் இரண்டாம் இடத்தை பிடித்து கோப்பையை தவறவிட்டது. 

உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டங்களில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி பத்து புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தது. இரு அணிகளும் இன்று அரையிறுதியில் மோத இருக்கின்றன. 

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 117 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. அதில், அதிகபட்சமாக நியூசிலாந்து அணி 59 வெற்றிகளுடனும், இந்தியா 50 வெற்றிகளுடனும் உள்ளது. 

இரு அணிகளும் இடையில் இதுவரை ஒரே ஒரு போட்டி டை-யான நிலையில், ஏழு போட்டிகள் முடிவு ஏதுமின்றி முடிந்தது. 

இந்தியா முதலில் பேட்டிங் செய்து 24 முறையும், சேசிங் செய்யும்போது 35 முறையும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், நியூசிலாந்து 28 முறையும் சேஸிங்கிலும், 22 முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றிபெற்றுள்ளது. 

உலகக் கோப்பையில் இதுவரை எப்படி..? 

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 10 முறை நேருக்குநேர் சந்தித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 5 முறையும், நியூசிலாந்துக்கு எதிரான இந்தியா 4 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது 

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

ஐசிசி நடத்திய போட்டிகளில் இதுவரை இந்தியா - நியூசிலாந்து: 

போட்டி போட்டிகளில் வெற்றி தோல்வி டிராக்கள்/NR
ஐசிசி உலகக் கோப்பை 10 4 5 1
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 1 0 1 0
ஐசிசி டி20 உலகக் கோப்பை 3 0 3 0
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 5 1 3 1
மொத்தம் 19 5 12 2

உலகக் கோப்பை 2023ல் எப்படி இந்திய அணி அரையிறுதிக்கு வந்தது..?

  • ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
  • பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
  • 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது
  • தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது

உலகக் கோப்பை 2023ல் எப்படி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வந்தது..?

  • இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது
  • வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
  • இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
  • ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
  • தென்னாப்பிரிக்காவிடம் 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
  • பாகிஸ்தானிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது (DLS)
  • 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது