இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று நடநது வருகிறது. கவுகாத்தியில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதால், இந்திய அணி வெற்றி பெறும் நோக்கத்தில் ஆடி வருகிறது. 

Continues below advertisement

ஹர்திக் பாண்ட்யா அபாரம்:

அதேசமயம், இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நியூசிலாந்து அணி கவனமாக ஆடி வருகிறது. பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 

ஹர்ஷித் ராணா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 3வது பந்திலே கான்வே அதிரடியாக ஆட முயற்சித்தார். அவர் இறங்கி வந்து அடித்த பவுண்டரிக்காக பந்தை அடித்தார். ஆனால், பவர்ப்ளே உள்ளே நின்ற ஹர்திக் பாண்ட்யா அந்த பந்தை அந்தரத்தில் பல்டி அடித்து அபாரமாக கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

பாராட்டு:

ஆல்ரவுண்டராக அசத்தும் ஹர்திக் பாண்ட்யா ஃபீல்டிங்கிலும் தரமான வீரராக உள்ளார். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய கான்வே இந்த போட்டியிலும் அதிரடியாக ஆட முயற்சித்து  அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யாவின் இந்த கேட்சிற்கு அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

நியூசிலாந்து அணி அதிரடியாக ஆட முயற்சித்து 14வது ஓவரிலே 100 ரன்களை கடந்தது. கான்வே 1 ரன்னில் அவுட்டாகிய நிலையில், டிம் செஃபெர்ட் 12 ரன்னில் அவுட்டானார். ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் அவுட்டானார். கிளென் பிலிப்ஸ் மட்டும் நிதானமாக ஆடினார். சாப்மன் 23 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தற்போது நியூசிலாந்து அணிக்காக கிளென் ப்லிப்ஸ் - மிட்செல் ஜோடி ஆடி வருகின்றனர். மைதானம் பேட்டிங்கிற்கும், சேசிங்கிற்கும் ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி சேசிங்கை தேர்வு செய்துள்ளது. 

அணி விவரம்:

இந்திய அணியின் சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், ஹர்ஷித் ராணா, பும்ரா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் களமிறங்கியுள்ளனர். 

நியூசிலாந்து அணியில் கான்வே, டிம் செஃபெர்ட், ரவீந்திரா, பிலிப்ஸ், சாப்மன், டேரில் மிட்செல், ஜேமிசன், ஹென்றி, இஷ் சோதி,டஃபி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.