ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் 33ஆவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தும், இங்கிலாந்தும் மோதின.


இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மழை குறுக்கீடு இல்லை. நாளை இந்தியா-வங்கதேசம் இடையே சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் 35ஆவது ஆட்டம் நடைபெறவுள்ளது.


இந்த ஆட்டம் அடிலெய்டில் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 1.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
வங்கதேச அணி நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தெடார்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்தது.


அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணியை வங்கதேசம் சந்தித்தது. அந்த ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரூப் 2 பிரிவில் 2 தோல்வி ஒரு வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.


இந்திய அணி சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி அதில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. கடைசியாக 30ம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எனினும், ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.


England vs New Zealand: கிலென் பிலிப்சின் அரை சதம் வீண்: நியூசிலாந்துக்கு முதல் தோல்வி


இந்த சூழ்நிலையில் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். இதனிடையே, வானிலையும் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய எந்தவொரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்படவில்லை.


வானிலை அறிக்கை


ஆனால், வானிலை ஆய்வு மைய அறிக்கைபடி நாளை போட்டி நடைபெறும் அடிலெய்டில் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவிக்கின்றன. 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் மாலையில் தென்மேற்கு திசையில் மணிக்கு 20 முதல் 30 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் 11 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


டிராவிட் பேட்டி


இந்த தொடரில் சோபிக்காத கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார். வார்த்தைகளாலும், செயல்களாலும் கே.எல்.ராகுலுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கி இருக்கிறோம். ராகுல் சிறந்த வீரர் ஆவார். அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இதை ஒப்புக் கொள்வதுடன் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். யாரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவது என்பதில் எனக்கும் ரோகித்துக்கும் எந்தவொரு சந்தேகமும் இல்லை. கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார் டிராவிட்.


நேருக்கு நேர் இதுவரை


இந்தியாவும், வங்கதேசமும் இதுவரை 11 டி20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்தியா 10 ஆட்டங்களிலும் வங்கதேசம் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.