IND vs BAN 3rd ODI: இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். 


இஷான்கிஷான் சதம்:


ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய இஷான் கிஷன் 85 பந்தில் 14 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உட்பட 101 ரன்கள் குவித்துள்ளார். போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச தீர்மானித்தது. இதனால் களம் இறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் மற்றும் இஷான் கிஷன் ஜோடி இன்னிங்சை தொடங்கியது.


தொடக்கம் முதல் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் 49 பந்தில் அரைசதம் அடித்தார்.  அதன் பின்னர் அடித்து ஆடிய இஷான் கிஷன் பங்களாதேஷ் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். இஷான் கிஷன் 90 ரன்களில் இருந்த போது சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த போது கேட்ச் ஆகி தனது விக்கெட்டினை இழந்திருப்பார். ஆனால், கொடுத்த கடினமான கேட்ச்சை தவறவிடவே கண்டத்தில் இருந்து தப்பி, சதம் விளாசியுள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை இஷான் கிஷன் அடித்துள்ளார்.