உலக டெஸ்ட் சாம்பியன்சிப்  தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கருப்புப் பட்டையுடன் களமிறங்கியுள்ளனர். 


ஒடிசாவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்:


உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து போட்டி தொடங்குவதற்கு முன்பாக, ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்தவாறு, விளையாடுவதற்காக ஆடுகளத்தில் நுழைந்தனர். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்.


ஒடிசா ரயில் விபத்து:


கடந்த 2ம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் ஷாலிமாரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாநகா பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த சரக்கு ரயிலின்  மோதி விபத்துக்குள்ளானது. அதேநேரம், யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயிலும் அதே பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 3 ரயில்கள் மோதி நடந்த இந்த  விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களுக்கு இரங்கள் தெரிவிக்கும் விதமாக தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள், கையில் கருப்புப் பட்டை அணிந்தவாறு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் களமிறங்கியுள்ளனர்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி:


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுப்பெற்று இருந்தாலும், நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்று அறிமுக தொடரிலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி கோட்டை விட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொண்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்துள்ளது.  


ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்:


டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்


இந்தியா பிளேயிங் லெவன்:


ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்