ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 8 ரன்களுக்கும் மற்றும் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். 

Continues below advertisement


முதல் ஒருநாள் போட்டி:


இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைப்பெற்று  வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் அறிமுக நிதிஷ் ரெட்டி களமிறங்குறார். 


ஏமாற்றம் தந்த RO-KO:


இந்த போட்டியில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் பெரிதும் எதிர்ப்பார்த்தது, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங்கை தான் ஆனால் இருவரும் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் அளித்தனர், ரோகித் சர்மா 8 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். 






சரி அவர் தான் விக்கெட்டை கொடுத்துவிட்டு வெளியேறினாலும், கோலி பேட்டிங்கை நம்பி காத்திருந்த இந்திய ரசிகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தார். 8 பந்துகளை சந்தித்த கோலி ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். 






இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 30 ஒரு நாள் போட்டி களில் விளையாடியுள்ள கோலி முதல் முறையாக டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.


மழையால் தாமதம்:


ஒரு புறம் இவர்கள் ஆட்டமிழக்க கேப்டன் சுப்மன் கில்லும் 10 ரன்களுக்கு நடைக்கட்டிய நிலையில் இந்திய அணி 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மழைக்குறுக்கிட்டு போட்டி மீண்டும் தொடங்கியது, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் பேட்டிங்கை தொடங்கினார், மேலும் போட்டியானது 49 ஓவர் போட்டியாக  குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.