பார்டர்-கவாஸ்கர் டிராபியின் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் மூன்று போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. 


இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. மிகவும் வறண்ட ஆடுகளத்தில் என்ன செய்வது என தெரியாமல் இந்திய அணி வீரர்கள் விழி பிதுங்கினர். சீரான இடைவெளியில் விக்கெடுகள் விழுந்தாலும், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்து வழுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 104 ரன்களிலும், கீரீன் 49 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.