IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
இஷான் கிஷன் மற்றும் சுப்மன்கில் அசத்தலான சதத்தால் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை முடித்து தற்போது ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 2வது போட்டி இன்று நடந்தது.
403 ரன்கள் டார்கெட்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகிய நிலையில், முன்னாள் கேப்டன் ரோகித் - கேப்டன் சுப்மன்கில் சிறப்பாக ஆடினார்கள். ரோகித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய நிலையில் 39 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 48 ரன்கள் விளாசி அவுட்டானார். கேப்டன் சுப்மன்கில் - இஷான் கிஷன் ஜோடி ஐபிஎல் அதிரடியை இந்த போட்டியிலும் தொடர்ந்தது.
சுப்மன்கில் 154 ரன்களும், இஷான் கிஷன் 125 ரன்களும் விளாச இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்களை இலக்காக நி்ர்ணயித்தது. இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு குர்பாஸ் - ஜட்ரான் நிதானமான தொடக்கம் தந்தனர். குர்பாஸ் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி அதிரடி காட்டினார்.
தனி ஆளாக போராடிய ரஹ்மத்:
சிறப்பாக ஆடிய அவர் 33 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஜட்ரான் 21 ரன்களில் அவுட்டாக அடுத்து அடல் - ரஹ்மத் ஷா ஜோடி சேர்ந்தனர். இலக்கு பெரியதாக இருந்தாலும் இருவரும் பொறுப்புடன் ஆடினர். அடல் அபாரமாக ஆடி வந்த நிலையில் வாஷிங்டன் சு்ந்தர் சுழலில் 50 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 42 ரன்களில் அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய டார்விஷ் 6 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின்னர், வ்ந்த வீரர்கள் ஒற்றை ரன்னில் அவுட்டாக மறு முனையில் தனி ஆளாக ரஹ்மத் ஷா போராடினார். அர்ஷ்தீப் சிங், ப்ரின்ஸ் யாதவ், குர்னூர் ப்ரார், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கட்டுக்கோப்பாக வீசினார்.
மாபெரும் வெற்றி:
தனி ஆளாக போராடிய ரஹ்மத்ஷா 9வது விக்கெட்டாக அவுட்டானார். அவர் ப்ரின்ஸ் யாதவ் பந்தில் 89 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து அவுட்டானார். டார்விஷ் காயம் காரணமாக உள்ளே ஆப்கானிஸ்தான் அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப்சிங் மற்றும் குர்னூர் ப்ரார் தலா 3 விக்கெட்டுகள், ப்ரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ட்ரெண்டிங் செய்திகள்



















