IND vs AFG 1st 20 highlights: கடைசியில் மிரட்டிய முகமது நபி! இந்திய அணிக்கு 159 ரன்கள் டார்கெட்!

IND vs AFG 1st T20 highlights: முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Continues below advertisement

இந்தியா - ஆப்கானிஸ்தான் டி 20:

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகுஇந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறதுஇந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளதுஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளதுஇந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Continues below advertisement

அதன்படி, இந்த போட்டியில் ஆடும் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வாழங்கப்படவில்லை. மேலும் , விராட் கோலியும் முதல் போட்டியில் விளையாடவில்லை.

அதிரடி காட்டிய முகமது நபி:

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினார்கள். அந்தவகையில் இருவரும் தங்களுடைய பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். சரியான பார்ட்னர்ஷிப் அமைத்த குர்பாஸ் மற்றும் ஜத்ரான் ஜோடி 50 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் 7 ஓவர் வரை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.

அப்போது அக்ஸர் படேல் வீசிய பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 28 ரன்களை குவித்தார். பின்னர், இந்திய அணி சார்பில் 8 வது ஓவரை ஷிவம் துபே வீசினார். ஷிவம் துபே வீசிய இரண்டாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி, 22 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்த, 25 ரன்களை விளாசினார்.

இதையடுத்து, அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் களம் இறங்கினார்கள். இதில், உமர் சாய் அதிரடியாக விளையாடினார். அப்போது ரஹ்மத் ஷா அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் 3 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த முகமது நபி அதிரடி காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில், 27 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு 42 ரன்களை குவித்தார். அப்போது முகேஷ் குமார் வீசிய பந்தில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 158  ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. 159 என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.

 

Continues below advertisement