சமீபத்திய ஐசிசி ஆடவர் டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியின் டெஸ்ட் தரவரிசையான 937 புள்ளிகளை பெற்று அவரது சாதனையை ஆஸ்திரேலியா வீரர் மார்னஸ் லாபுஷாக்னே சமன் செய்துள்ளார்.
மார்னஸ் சமீபத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். டிசம்பர் 5 அன்று ஜோ ரூட்டை வீழ்த்தி நம்பர் 1 இடத்தைப் பிடித்த லாபுஷாக்னே, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 502 ரன்கள் குவித்தார். தொடர்ச்சியான மூன்று சதங்களை விளாசிய அவர் 937 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இது 2018இல் முதலிடத்தைப் பிடித்தபோது கோலியின் மதிப்பும் 937-ஆக இருந்தது.
பாயிண்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, லாபுஷாக்னே தற்போது ஆல்-டைம் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்த சிறந்த ஆட்டத்தை தொடர்ந்தால், சர் கேரி சோபர்ஸ் மற்றும் குமார் சங்கக்காரா போன்றவர்களை விஞ்சலாம்.
சர் டான் பிராட்மேன் 961 புள்ளிகளைப் பெற்று ஆல் டைம் ரெக்கார்டை படைத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் முறையே 947 மற்றும் 942 புள்ளிகளுடன் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் அடிலெய்டு ஓவலில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஸ்மித், 875 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் சிக்கியுள்ள பாபர் அசாம் மற்றும் ரூட் போன்றவர்கள், வடிவத்தில் முதல் ஐந்து பேட்டர்களில் தங்கள் இருப்பைக் குறிக்கின்றனர். ரிஷப் பண்ட் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 10 ஆவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் சமீபத்திய பேட்டிங் சென்சேஷன், ஹாரி புரூக், அவரது தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ளார். பாகிஸ்தானில் இதுவரை அவர் சிறப்பாக விளையாடியதற்காக 15 இடங்கள் முன்னேறி 55வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரையில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நம்பர் 1 இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரணஅடாவது இடத்திலும், தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பும்ரா நான்காவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அஃப்ரிடி 5ஆவது இடத்தில் உள்ளார்.