ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா சிலமணி நேரங்கள் மட்டுமே முதலிடத்தில் இருந்தது. நாக்பூர் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியாவை முந்தி முதலிடம் பிடித்த இந்திய அணி தற்போது மீண்டும் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 



இந்தியா 115 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற நிலையில் ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தில் உள்ளது. 


மூன்று வடிவங்களிலும் இந்தியாவை நம்பர் ஒன் ஆக்கிய சில மணிநேரங்களில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் யு-டர்ன் எடுத்துள்ளது. ஐசிசி புதன்கிழமை இந்தியாவுக்கு டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை வழங்கியது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணி மூன்று வடிவங்களிலும் முதலிடத்தை எட்டியது. தற்போது ஐசிசி அதை மீண்டும் புதுப்பித்து டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் இருந்த இந்தியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்தாலும் நம்பர் ஒன் அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது.







ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. இன்று காலை ஐசிசி வெளியிட்ட புது அப்டேட்டில், அப்போது இந்தியா 115 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 111 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தது. தற்போது மீண்டும் ஒரு புதிய அப்டேட்டிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி 126 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளது. அதே சமயம் இந்தியாவின் ரேட்டிங் புள்ளிகள் 115 ஆக உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 







 

ஐசிசியின் வெளியிட்ட பெரிய தவறால், இந்திய அணி ஒரே நேரத்தில் மூன்று வடிவங்களிலும் முதலிடத்தை எட்டி, மீண்டும் பின்னுக்கு சென்றது. இதற்கு முன்பு 2014-ல் தென்னாப்பிரிக்க அணி ஒரே நேரத்தில் மூன்று வடிவங்களிலும் முதல் இடத்தில் இருந்தது.  இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஐசிசி மீது கடும் எதிர்ப்புகள் வெளிபடுத்தி வருகின்றனர்.