மேலும் அறிய

IND Vs Ned: போய் வாடா..! வெளியேறிய ஆஸ்திரேலியா - வாழ்வா? சாவா? இந்தியா Vs நெதர்லாந்து, பாக்., Vs நமீபியா

ICC T20 World Cup India Vs Ned: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

ICC T20 World Cup India Vs Ned: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட, ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேறியது.

ஆஸ்திரேலியா எலிமினேட்:

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்று பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற ஆஸ்திரேலிய அணி, தனது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவை சார்ந்து இருந்தது. ஆனால், அந்த போட்டி மழையால் கைவிடப்படவே 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலியாவால் 4 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும் என்பதால், நடப்பு ஐசிசி டி20 உலக் கோப்பையில் லீக் சுற்றுடன் ஆஸ்திரேலியா அணி வெளியேறியுள்ளது. இதனிடையே, இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் சுற்று போட்டி நடைபெற உள்ளது.

இந்தியா - நெதர்லாந்து மோதல்

இரு அணிகளும் மோதும் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே 6 புள்ளிகளுடன் தகுதி பெற்றுவிட்ட இந்தியாவிற்கு, இன்றைய போட்டி ஒரு பயிற்சி ஆட்டமே ஆகும். அதேநேரம், நெதர்லாந்து அணி இன்றைய போட்டியில் வென்று, பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றால், இந்த இரு அணிகளில் ஒன்று ரன் ரேட் அடிப்படையில், க்ரூப் ஏ-விலிருந்து சூப்பர் சுற்றுக்கு தேர்வு செய்யப்படக் கூடும். எனவே நெதர்லாந்து அணிக்கு இது வாழ்வா? சாவா? போட்டியாகும்.

இந்திய அணியின் பலம்

இந்திய அணி நீளமான மற்றும் வலுவான பேட்டிங் லைன் - அப்பை கொண்டிருப்பது எதிரணிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அதிலும் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அபிஷேக் சர்மா கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும் சொதப்பியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாம்சனிற்கு மீன்றும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த வீரரான ஹர்திக் பாண்ட்யா கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. பவுலிங் யூனிட் ஒட்டுமொத்தமாகவே நடப்பு உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்டு வருகிறது. அநாவசியமான தவறுகள் எதையும் செய்யாமல் தங்களது திறமையை வெளிப்படுத்தினாலே இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றுவிடலாம். இந்த இரு அணிகளும் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அதிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

நரேந்திர மோடி மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமானதாகும். வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகிய இரண்டுமே இருக்கும் என்பதால், பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஷாட்களை மிகவும் எளிதில் வெளிப்படுத்தலாம். புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 165 ஆக உள்ளது. மழையால் இந்த போட்டி பாதிக்கப்பட எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உத்தேச பிளேயிங் லெவன்:

இந்தியா: இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி, ரிங்கு சிங்.

நெதர்லாந்து: மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), ஜாக் லயன் கெஷட், லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரோலோஃப் வான் டெர் மெர்வ், கைல் க்ளெயின், பால் வான் மீக்ரென்

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற்ற அணிகள்:

க்ரூப் 1 க்ரூப் 2
இந்தியா (க்ரூப் - A) இங்கிலாந்து (க்ரூப் - C)
மேற்கிந்திய தீவுகள் (க்ரூப் - C) நியூசிலாந்து (க்ரூப் - D)
தென்னாப்ரிக்கா (க்ரூப் - D) இலங்கை (க்ரூப் - B)
ஜிம்பாப்வே (க்ரூப் - B) உறுதியாகவில்லை (பாகிஸ்தான்/நெதர்லாந்து)

இன்று நடைபெற உள்ள நமீபியா அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை தோல்வியுற்றால் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். அதையும்மீறி நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டி உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
Embed widget