உலககோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இலங்கையும், தென்னாப்பிரிக்காவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கையின் பேட்டிங்கை பதும்நிசங்காவும், குசல் பெரேராவும் ஆட்டத்தை தொடங்கினார்.




ஆனால், 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குசல் பெரேரா நோர்ட்ஜே பந்தில் போல்டாகினார். இதையடுத்து, களமிறங்கிய அசலாங்காவும், நிசாங்காவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த அசலாங்கா 14 ரன்களில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து, இலங்கையின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது.


இதையடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்சே டக் அவுட்டாகினார். அவிஷ்கா பெர்னாண்டோ 3 ரன்களிலும் வெளியேறினார். வனிந்து ஹசரங்கா 5 பந்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தசுன் சனகா 12 பந்தில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். கருணரத்னே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடி தனி ஆளாக ரன்களை உயர்த்திய பதும் நிசாங்கா 8வது விக்கெட்டாக வெளியேறினார். 58 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 72 ரன்களில் ப்ரடெரியஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.




இந்த தொடர் தொடங்கியது முதல் சிறப்பாக ஆடாத இலங்கை கேப்டன் தசுன் சனாகா, இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடாமல் ப்ரெடரியஸ்  பந்தில் 12 பந்தில் 2 பவுண்டரியுடன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை எடுத்தது.


தப்ரைஸ் ஷம்சி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ட்வெய்ன் ப்ரெட்ரியஸ் 3 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். ஆன்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.  




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண