புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 புள்ளிகளை இழந்த நிலையில், தரவரிசையில் குறையாமல், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Continues below advertisement


அஸ்வின் சறுக்கல்


கடந்த வாரம் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறிய அஷ்வின், இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த போட்டியை வென்றிருந்தது. இப்போது ஆறு புள்ளிகள் இறங்கியதால், ஆண்டர்சன் உடன் முதலிடத்தை பகிறந்துகொண்டுள்ளார். அதாவது, அஸ்வின் மற்றும் ஆண்டர்சன் இருவரும் தலா 859 புள்ளிகளுடன் முதல் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.



நம்பர் 1 ஐ பிடிக்க ரேஸ்


ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோரும் இந்த ரேஸில் வரிந்து கட்டி வருகின்றனர். உலகின் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளராக ஆவதற்கான போர் மேலும் சூடுபிடித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துகொண்டிருக்கும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் இறுதி இரண்டு டெஸ்டில் இருந்து வெளியேறிய கம்மின்ஸ்-ற்கு 849 புள்ளிகளாகள் குறைந்துள்ளன. ஆனால் அவர் ஏற்கனவே இருந்த அதே மூன்றாவது இடத்தில் உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: IND vs AUS: 4-வது டெஸ்ட்டை காணவரும் இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள்.. அன்றைய முழு நாளும் இங்கேதானாம்..!


ரபாடா லயன் முன்னேற்றம்


இதற்கிடையில், செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 87 ரன்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு 807 ரேட்டிங் புள்ளிகள் உடன் முன்னேறினார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயனும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார். இந்தூரில் அவர் 11 விக்கெட்டுகளை வென்றதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக (769 மதிப்பீடு புள்ளிகள்) ஐந்து இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறினார்.



டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை


டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். தென்னாப்பிரிக்காவின் வலது கை பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரம் 21 இடங்கள் முன்னேறி 33-வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் மிடில் ஆர்டர் பேட்டர் ஜெர்மைன் பிளாக்வுட் 12 இடங்கள் முன்னேறி 35-வது இடத்திலும் உள்ளனர்.


ஒருநாள் தரவரிசை


பங்களாதேஷில் இங்கிலாந்து தொடர் முடிந்ததைத் தொடர்ந்து சமீபத்திய ODI வீரர்கள் தரவரிசையிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் இந்த பட்டியலில் 5 இடங்கள் முன்னேறி ஒட்டுமொத்தமாக 12-வது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் அவரது அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைப் பிடித்தார். அனுபவம் வாய்ந்த டேவிட் மலான் 22 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தைப் பிடித்தார். ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ள பங்களாதேஷ் நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன், பேட்டர்கள் பட்டியலில் ஐந்து இடங்கள் முன்னேறி 27வது இடத்தையும், பந்துவீச்சாளர்களில் இரண்டு இடங்கள் ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்.