ஒருநாள் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியானது அக்டோப்பர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்குகிறது. 


5 முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு சென்னையில் இந்திய அணியை அக்டோபர் 8ம் தேதி சந்திக்கிறது. 


ஒருநாள் உலகக் கோப்பை குரூப் ஸ்டேஜில் இந்திய அணி மொத்தம் 9 லீக் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தநிலையில், இந்தியா அணி எந்தெந்த அணியுடன் எந்தெந்த நாட்களில் விளையாடுகிறது என்ற முழு அட்டவணையை இங்கே காணலாம்.


அதிகாரப்பூர்வ அட்டவணை 



  • இந்தியா vs ஆஸ்திரேலியா - அக்டோபர் 8, சென்னை

  • இந்தியா vs ஆப்கானிஸ்தான் - அக்டோபர் 11, டெல்லி

  • இந்தியா vs பாகிஸ்தான் - அக்டோபர் 15, அகமதாபாத்

  • இந்தியா vs வங்கதேசம் - அக்டோபர் 19, புனே

  • இந்தியா vs நியூசிலாந்து - அக்டோபர் 22, தர்மசாலா

  • இந்தியா vs இங்கிலாந்து - அக்டோபர் 29, லக்னோ

  • இந்தியா vs தகுதிச் சுற்று 2  - நவம்பர் 2, மும்பை

  • இந்தியா vs தென்னாப்பிரிக்கா - நவம்பர் 5, கொல்கத்தா

  • இந்தியா vs தகுதிச் சுற்று 1 - நவம்பர் 11, பெங்களூரு


முழு அட்டவணை: 






உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. 


அக்டோபர் 15ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிகிறது. மேலும், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல்,  அக்டோபர் 29ம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது.