மேலும் அறிய

ICC T20 Worldcup: டி20 உலகக் கோப்பை.. டிவி, மொபைல் மட்டுமில்லை - தியேட்டர்,ரேடியோவிலும் - எங்கு? எப்போது?

ICC T20 Worldcup Broadcast: இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சி,மொபைலில் மட்டுமின்றி தியேட்டரில் ஒளிபரப்பட்ட ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது.

ICC T20 Worldcup Broadcast: இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை போட்டியில், மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. 

ஐசிசி டி20 உலகக்கோப்பை:

கிரிக்கெட் ரசிகர்களின் பல மாத காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக நாளை, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது. பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நீளும் இந்த போட்டியில், 20 அணிகள் பங்கேற்க 55 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என மொத்தம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்று, அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப்போட்டி என அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சிகளில் மற்றும் தொலைபேசிகளில் எப்படி? எதில்? பார்ப்பது என்ற ரசிகர்களின் பிரதான கேள்விக்கான பதிலை இந்த தொகுப்பில் அறியலாம்.

டி20 உலகக் கோப்பையை எங்கு பார்க்கலாம்?

இந்தியாவை பொறுத்தவரையில் ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலிலும் போட்டியின் நேரலையை கண்டுகளிக்கலாம். அனைத்து போட்டிகளும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் என இரண்டிலும் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் மட்டுமே போட்டியை காணக்கூடிய ரசிகர்களுக்கு ஜியோ செயலியில் வெர்டிகல் வீடியோ ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளது. 

தியேட்டரிலும் கிரிக்கெட் அனுபவம்..

தொலைக்காட்சியையும் தாண்டி மிகப்பெரிய திரையில் தங்களது பிடித்தமான வீரர்களை காண வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஜியோ ஸ்டார் நிறுவனமானது, PVR Inox  நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் மூலம், பல டி20 உலகக் கோப்பை போட்டிகள் நாடு முழுவதும் திரையரங்குகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக போட்டியின் லைவ் கவரேஜானது, ஐசிசியின் அதிகாரப்பூர்வ செயலியில் ஆடியோ கமெண்ட்ரியும் வழங்கப்பட உள்ளது.

டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள மைதானங்கள்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டுக் கழக (SSC) கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டியில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

IND vs AFG: மீண்டும் வந்த சாம்சன்.. ஆப்கானிஸ்தான் கூட ஆடப்போற இந்தியா டீம் இவங்கதான்! 2 தமிழர்களுக்கு சான்ஸ்!
IND vs AFG: மீண்டும் வந்த சாம்சன்.. ஆப்கானிஸ்தான் கூட ஆடப்போற இந்தியா டீம் இவங்கதான்! 2 தமிழர்களுக்கு சான்ஸ்!
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா போகுமா? போகாதா?
WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா போகுமா? போகாதா?
Sonal Dinusha: தனி ஒருவன்.. இலங்கையின் ஒளிரும் புதிய நட்சத்திரம்! யார் இந்த சோனல் தினுஷா?
Sonal Dinusha: தனி ஒருவன்.. இலங்கையின் ஒளிரும் புதிய நட்சத்திரம்! யார் இந்த சோனல் தினுஷா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
US Army Sec. Resigns: ட்ரம்ப்புக்கு ஷாக்.! ஈரான் போருக்கு நடுவே அமெரிக்க ராணுவச் செயலாளர் ராஜினாமா.! பின்னடைவா.?
ட்ரம்ப்புக்கு ஷாக்.! ஈரான் போருக்கு நடுவே அமெரிக்க ராணுவச் செயலாளர் ராஜினாமா.! பின்னடைவா.?
Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
Hector Tomahawk First Look: எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் முதல் பார்வை; கம்பீரமான எஸ்யூவியின் ஈர்க்கும் 5 முக்கிய அம்சங்கள் இதோ
எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் முதல் பார்வை; கம்பீரமான எஸ்யூவியின் ஈர்க்கும் 5 முக்கிய அம்சங்கள் இதோ
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
Volvo EX90 EV SUV: யப்பா, மைலேஜ் அள்ளுதே.! ஒரே சார்ஜில் 700 கிமீ பயணம்; EX90 சொகுசு ரதத்தை இறக்கிய வோல்வோ; கார் எப்படி இருக்கு.?
யப்பா, மைலேஜ் அள்ளுதே.! ஒரே சார்ஜில் 700 கிமீ பயணம்; EX90 சொகுசு ரதத்தை இறக்கிய வோல்வோ; கார் எப்படி இருக்கு.?
Embed widget