மிக சீக்கிரமாகவே எனது ஆட்ட முறையை சூர்யகுமார் யாதவ் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்றோருடன் ஒப்பிடுகிறீர்கள், அதற்கு இன்னும் பல தூரங்கள் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.


முகமது ஹாரிஸ்


ஹரிஸ் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆண்கள் ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக ஆட உள்ளார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) A க்கு எதிராக ஆடி இரண்டு போட்டிகளில், 32 சராசரியுடன், 64 ரன்கள் குவித்துள்ளார். அதில் அவரது அதிகபட்சம் 55 ஆகும். “இவ்வளவு விரைவில் எங்கள் இருவரையும் ஒப்பிடக்கூடாது, சூர்யாவுக்கு 32-33 வயது ஆகிறது. நான் இன்னும் 22 வயது சிறுவன். அந்த நிலையை அடைய நான் இன்னும் அதிக வேலையைச் செய்ய வேண்டும்,” என்று ஹரீஸ் உள்ளூர் யூடியூப் சேனலிடம் கூறியதாகக் தெரிகிறது.



360 டிகிரி வீரர் என பெயர்


“சூர்யா, டி வில்லியர்ஸ் என அவரவருக்கு என லெவல் உண்டு, நான் என் லெவலில் நன்றாக இருக்கிறேன். நான் 360 டிகிரி கிரிக்கெட் வீரராக பெயர் எடுக்க விரும்புகிறேன், அவர்களை போல ஆட வேண்டும் என்று நினைக்க வில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது ராகுல் காந்தி இல்லையாம்.. கூட்டத்தில் நடந்ததை விவரமாக சொன்ன எம்பி திருமாவளவன்


ஹாரிஸ்-இன் வளர்ச்சி


ஜூன் 2022 இல் பாகிஸ்தான் தேசிய அணிக்காக ஹரிஸ் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். சர்வதேச அரங்கில் அவரது செயல்திறன் பாராட்டத்தக்க வகையில் இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுக்கு எதிரான தொடருக்கான ODI மற்றும் T20I அணிகளில் அவருக்கு இடம் கிடைத்தது.



ஹாரிஸ் - சூர்யா


பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) ஹரீஸின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. அவர் டிசம்பர் 2021 இல் பெஷாவர் சல்மி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், பின்னர் அவர் அணியின் தொடக்க வீரராக முக்கிய பங்கு வகித்துள்ளார். 2023 பிஎஸ்எல்லில், அவர் 11 இன்னிங்ஸ்களில் 350 ரன்கள் குவித்து, போட்டியில் அதிக ரன் எடுத்தவர்களில் ஒருவரானார். சூர்யகுமாரைப் பொறுத்த வரையில், அவரது தனித்துவமான ஸ்ட்ரோக்குகளின் காரணமாக டி20 போட்டிகளில் சிறந்த இந்திய பேட்டர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார். முன்பிலிருந்தே கிரிக்கெட்டில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், 2021 இல் இந்திய அணியில் அறிமுகமான பிறகுதான், தாமதமாக அவருடைய புகழ் வளர்ந்தது. பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.