இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தான் படித்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்று மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார். 


சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பவுலர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். 



கை கொடுக்கும் ஐபிஎல், டிஎன்பிஎல்:


குறிப்பாக ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் இந்த ஆண்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மேலும், சிறந்த பந்துவீச்சாளர் பட்டியலிலும் இடம் பிடித்து அசத்தார். ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பட்டியலிலும் நடராஜன் இடம்பிடித்தார்.


இது மட்டுமின்றி, சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதிலும் சிறப்பாக விளையாடிய நடராஜன் தனது அணியான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை கால் இறுதி ஆட்டம் வரை கொண்டு சென்றார். டிஎன்பிஎல் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 3 ஓவர்களை வீசிய நடராஜன் மூன்று விக்கெட்டுகளை எடுத்து ஆறு ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இது இந்த ஆண்டின் சிறந்த எக்காணாமியாக பார்க்கப்பட்டது. 


வாய்ப்பு மறுப்பு:


இப்படி சிறப்பாக ஆடி வரும் நடராஜனுக்கு இந்திய அணியில் தற்போது இடம் மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உலகக் கோப்பை போட்டியில் நடராஜன் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த எந்த வீரருக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்தனர். 


இருப்பினும் தனக்கு வாய்ப்பு போதுமான அளவு பிசிசிஐ கொடுத்துள்ளது. எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தி விட்டேன். இந்திய அணியின் விளையாடுவதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டிய சமீபத்தில் நடராஜன் கூறியிருந்தார். ஆனால் அதற்குப் பின்னரும் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. 


https://www.instagram.com/p/C_Pm8H-PBbs/?igsh=bWFuaWVrejZyNzFj


மீண்டும் பள்ளியில் நடராஜன்:


இந்த நிலையில் நடராஜன் தற்போது பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களிடையே கலந்துரையாடி வருகிறார். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள அவர் படித்த சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த நடராஜனுக்கு, பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


"எங்கு என் வாழ்க்கை தொடங்கியதோ அங்கு மீண்டும் வந்துள்ளேன். நான் படித்த சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு நன்றி. மிகவும் பெருமையாக உள்ளது" என சமூக வலைதளத்தில் மாணவர்கள் இடையே எடுத்துக் கொண்டு புகைப்படத்துடன் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் வெளிப்படுத்தி உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.