இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா புதிய காதலி என கூறப்படும் ஜாஸ்மின் வாலியாவுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவி வருகிறது.
பாண்ட்யா புதிய காதலி:
இந்தியா vs பாகிஸ்தான், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பல பிரபலங்களில் பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மின் வாலியாவும் ஒருவர். நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் ஹர்திக் பாண்டியா பிரிந்த பிறகு, அவரது காதலி இவர் தான் என்கிற வதந்தி சமூக ஊடகங்களில் பரவியது, மேலும் துபாயில் நடந்த போட்டியில் ஜாஸ்மின் வாலியாவின் சமீபத்திய புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜாஸ்மின் வாலியா முதல் முறையாக பொதுவெளியில் தென்ப்பட்டது இது முதல்முறை அல்ல இதற்கு முன்னால் இருவரும் ஆகஸ்ட் 2024 இல் கீரிஸ் நாட்டில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் டேட்டிங் செய்வது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எதுவும் இல்லை, ஏனெனில் அவர்களின் புகைப்படங்கள் வைரலானபோது, இருவரும் ஒன்றாகக் கிளிக் செய்யப்படவில்லை.
2017 ஆம் ஆண்டு ஜாக் நைட்டுடன் இணைந்து பாடிய 'பாம் டிக்கி' பாடல் வைரலானதால், பிரிட்டிஷ் பாடகி பிரபலமடைந்தார்.
இதையும் படிங்க: Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
பாண்ட்யா சாதனை:
சர்வதேச கிரிக்கெட்டில் 4000+ ரன்களையும் 200+ விக்கெட்டுகளையும் வீழ்த்திய 6வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹார்டிக் பாண்ட்யா பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் அடங்கிய இந்த உயரடுக்கு பட்டியலில் இந்திய ஆல்ரவுண்டர் இப்போது ஒரு பகுதியாக உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களுக்கும் மேல் மற்றும் 200 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய இந்திய வீரர்கள்:
- சச்சின் டெண்டுல்கர் - 34357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்டுகள்
- கபில் தேவ் - 9031 ரன்கள் மற்றும் 687 விக்கெட்டுகள்
- ரவி சாஸ்திரி - 6938 ரன்கள் மற்றும் 280 விக்கெட்டுகள்
- ரவீந்திர ஜடேஜா - 6664 ரன்கள் மற்றும் 604 விக்கெட்டுகள்
- ரவிச்சந்திரன் அஸ்வின் - 4394 ரன்கள் மற்றும் 765 விக்கெட்டுகள்
- ஹர்திக் பாண்ட்யா - 4149 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள்