நேற்று ஒரு நண்பரின் பிறந்தநாள் விழாவில் க்ளென் மேக்ஸ்வெல் கலந்துகொண்டபோது ஒரு எதிர்பாராத விபத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி சூப்பர் 12 சுற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதை தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல்- ரவுண்டர் மேக்ஸ்வேல் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், நேற்று ஒரு நண்பரின் பிறந்தநாள் விழாவில் க்ளென் மேக்ஸ்வெல் கலந்துகொண்டபோது ஒரு எதிர்பாராத விபத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 வயது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட மேக்வெல், அவரை துரத்தி கொல்லைப்புறத்தில் ஓடும் போது தவறி விழுந்து இடது ஃபைபுலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் முக்கிய அங்கமான இவர் முழு BBL தொடரை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் நடக்கும் இந்திய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் சேர்க்கப்படுவது சந்தேகம். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக சீன் அபோட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா தேர்வுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவிக்கையில், கிளென் தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து. க்ளென் தனது கடைசி சில தொடர்களில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவரது காயம் கவலை அளிக்கிறது” என தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்
வியாழன் நவம்பர் 17: அடிலெய்டு ஓவல், மதியம் 1:50
சனிக்கிழமை நவம்பர் 19: எஸ்சிஜி, பிற்பகல் 2:20
செவ்வாய்க்கிழமை நவம்பர் 22: மெல்போர்ன், மதியம் 2:20 மணி
முன்னதாக, இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்தில் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தபோது கால் முறிவு ஏற்பட்டதால் டுவென்டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியாவின் பேக்அப் விக்கெட் கீப்பரான ஜோஷ் இங்லிஸ், ஒரு கோல்ஃப் விளையாட்டின்போது அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உலகக் கோப்பை தவறவிட்டார்.