Kris Srikkanth Slams Gambhir: கம்பீருக்கு ஆமாம் சாமி போடணும்... சீன் போட்டால் டீம்ல் இடம்.. வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்
ஒரே நிரந்தர முகம் — ஹர்ஷித் ராணா! ஆனால் அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்பதையே யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஸ்ரீ காந்த் காட்டமான விமர்சனத்தை எடுத்து வைத்தார்

கம்பீருக்கு ஆமாஞ்சாமி போட்டால் இந்திய அணியில் இடமுண்டு என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் கடுமையான விமர்சித்து எடுத்து வைத்துள்ளார்.
Ind vs Aus தொடருக்கான இந்திய அணி:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் ஜடேஜா, சமி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே போல் ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
கிளம்பிய சர்ச்சை:
அணி தேர்வில் பராப்பட்சம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் மீது விமர்சனங்கள் எடுத்து வைக்கப்பட்டது. அதிலும் சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பெற்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கியது மற்றும்ஒருநாள் போட்டிகளில் கேப்டன்சியில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத கில்லுக்கு எப்படி கேப்டன்சி கொடுக்கலாம் என்றும் விமர்சனங்கள் எடுத்து வைக்கப்பட்டது.
சீறி எழுந்த சீக்கா:
15 பேர் கொண்ட அணியின் அறிவிப்பு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முகமது ஷமி, சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற பிரபல வீரர்கள் இடம் பெறவில்லை, அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அனைத்து வடிவங்களிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீ காந்த, இது தொடர்பாக தன் யூடியூப் சேனனில் ஸ்ரீகாந்த் கூறும்போது
"இப்படி அணித் தேர்வை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் வீரர்கள் முழுமையாகக் குழப்பமடைகின்றனர். நமக்கே தினமும் — இவர்கள் யாரை அணியில் சேர்ப்பார்கள், யாரை நீக்குவார்கள் என்ற குழப்பம் உருவாகிறது. ஒரு நாள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருப்பார்; மறுநாள் காணமல் போய்விடுகிறார். ஒரே நிரந்தர முகம் — ஹர்ஷித் ராணா! ஆனால் அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்பதையே யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆமாம் சாமி போட்டால் அணியில் இடம்:
ஒவ்வொரு முறை வீரர்களை சேர்த்து, பிறகு நீக்கும் இந்த நடைமுறையால், அவர்கள் தன்னம்பிக்கையே நொறுங்குகிறது. சிலர் நன்றாக ஆடியும் வாய்ப்பு கிடைப்பதில்லை; அதே நேரத்தில் சிலர் மோசமாக ஆடியும் அணியில் நிலைத்திருக்கின்றனர். தற்போது அணியில் இருப்பதற்கான ரகசியம் — கம்பீரிடம் ‘ஆம் சாமி’ என்று சொல்வதா என்னவோ என்றே தோன்றுகிறது.
2027 உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்க வேண்டிய நேரம் இது. ஆனால் இவர்கள் தேர்வு செய்கிற விதத்தைப் பார்த்தால், அதற்கான திட்டமோ தூரநோக்கோ தெரியவில்லை. ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி போன்றவர்கள் உத்தேச அணியில் இடம் பெற்றால், உலகக் கோப்பை கனவுக்கு ‘டாடா’ சொல்ல வேண்டிய நிலை வரும்.
சீன் வேலைக்காகது:
ஹர்ஷித் ராணா சினிமா ஸ்டைலில் சில ‘ஷோ’ வேலைகளைச் செய்கிறார். ஆனால் பந்துவீச்சு சரியாக இல்லாவிட்டால், அந்த நடிப்பால் எதுவும் கிடைக்காது. ஐபிஎல்லிலும் இதே போல சினிமாத்தனமான சேஷ்டைகள் செய்தார். இது சரியான மனநிலை அல்ல — வெறும் கவன ஈர்ப்புக்காக செய்த ‘சீன்’ மாத்திரமே. பந்து தாண்டி சென்ற பிறகு டைவ் அடித்தால் என்ன பயன்? ஆக்ரோஷமும் ‘சீன் போடுவதும்’ வேறு வேறு விஷயங்கள்," என்று ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.





















