ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது பங்கேற்று வருகிறது. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்துடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது. இந்தியா- நியூசிலாந்து மோதும் மூன்றாவது டி20 போட்டி இந்தியாவில் உள்ள பிரபலமான மைதானங்களில் ஒன்றான ஈடன்கார்டனில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்குவங்க அரசு நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் 70 சதவீத ரசிகர்கள் வரை அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவும், நியூசிலாந்தும் மோதும் மூன்றாவது டி20 போட்டிக்கு 70 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது குறித்து மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தலைவர் அவிஷேக் டால்மியா, மாநில அரசு 70 சதவீத ரசிகர்களுக்கு அனுமதித்துள்ளது. பி.சி.சி.ஐ.யும் அனுமதித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ.யும் மாநில அரசின் ஒப்புதலுக்கு சம்மதம் தெரிவித்து என்றால், ஈடன்கார்டன் மைதானத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும், நியூசிலாந்தும் நவம்பர் 17-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டி ராஞ்சியில் தொடங்க உள்ளது. இரண்டாவது டி20 போட்டியும் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 21-ந் தேதி கொல்கத்தாவில் நேருக்கு நேர் மோத உள்ளது. பெங்கால் கிரிக்கெட் நிர்வாகி, ஆடுகளத்தையும், அவுட்பீல்டையும் தயார் நிலையில் வைத்திருக் நாங்கள் முன்கூட்டியே நன்றாக வேலை செய்துள்ளோம். விக்கெட்டுகள் உறுதியான பவுன்ஸ் கொண்டிருக்கும். அது நிச்சயம் நல்ல கிரிக்கெட்டை உறுதியளிக்கிறது. பெண்களுக்கான போட்டிகளிலிருந்தும் நாங்கள் நியாயமான யோசனையைப் பெறுவோம்.
இந்த போட்டிக்கான இந்திய அணி முதன்முறையாக விராட்கோலி கேப்டனாக இல்லாமல் களமிறங்க உள்ளது. மேலும், இந்த தொடரில் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கிய பல்வேறு புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்