DC-W vs MI-W, WPL 2023: மும்பை டெல்லி அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று மோதிக்கொள்கின்றன. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளி பட்டியலில் மும்பை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும் என்பதால், டெல்லி இந்த போட்டியில் மிகவும் ஆக்ரோசமாக இருக்கும். அதேபோல் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ள மும்பை அணிக்கு அதனை தக்கவைத்துக் கொள்ள ஒட்டுமொத்த பலத்தையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 


இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இன்று (மார்ச் 9) இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.   இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்ட்ங் தேர்வு செய்துள்ளது. 


டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் : மெக் லேனிங் , ஷஃபாலி வர்மா, மரிசான் கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், தனியா பாட்டியா , மின்னு மணி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், தாரா நோரிஸ்


மும்பை இந்தியன்ஸ் பெண்கள் : ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர், அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்