ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கடைசி இடத்தில் சிஎஸ்கே! மற்ற அணிகளின் நிலவரம் இங்கே!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன் தினம் இரவு சென்னை சேப்பாக்கம் கிரவுண்டில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிஎஸ்கே அணி எதிர்கொண்டது.
Just In




அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா அணி தோற்கடித்தது.
இதில் சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 103 ரன்களை எடுத்தது. இதை 10.1 ஓவர்களில் கொல்கத்தா அணி எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்த சென்னை அணி அதன் பின் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது.
5 போட்டிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது சிஎஸ்கே. இது ரசிகர்களை செம கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே அணிக்கும் தோனிக்கும் இருந்த ஒரு கிரேஸ் இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ரசிகர்கள் மனம் குமுறி தங்கள் ஆதங்கத்தை வெஇப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல முன்னாள் வீரர்களும் சிஎஸ்கேவை விமர்சித்து வருகின்றனர். தோனிக்குமே முடியவில்லை ஓய்வு எடுக்கலாம் என ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். தோனிக்கு இருக்கும் மரியாதையையும் இழந்து வருகிறார் என குற்றமும் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. அதாவது புள்ளிப்பட்டியலில் 10 வது இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.
நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் அது 8வது இடத்தை பிடித்தது. இதையடுத்து 9 வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.
ராஜஸ்தான் அணி 7வது இடத்திலும் பஞ்சாப் அணி 6வது இடத்திலும் உள்ளது. ஆர்.சிபி 5வது இடத்திலும் கேகேஆர் 4வது இடத்திலும் உள்ளது.
டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் அணி 6 போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனாலும் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
லக்னோ அணி 6 போட்டிகள் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வென்று 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.