இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 வது டெஸ்ட், 3 டி 20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெற்றிகரமாக திரும்பியது. 5 வது டெஸ்டில் தோல்வியடைந்தாலும் 2 -2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 மற்றும் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 


இந்திய அணியின் வெற்றியை விட இந்திய ரசிகர்கள் அதிகம் கவனித்தது அணி வீரர்கள் ஷாம்பெயினை ஓபன் செய்து வெற்றியை கொண்டாடிய தருணத்தைதான். அப்படி என்ன சிறப்பு இருந்தது என்று கேட்டால் அதற்கு விடை கீழே..


சேப்பல் டவுன் என்ற ஷாம்பெயின்தான் இப்பொழுது அதிகமாக இந்தியர்களின் கவனத்தை பெற்றுள்ளது. பொதுவாக மைதானத்தில் கேமராமேன்கள் எதார்த்தமாக காட்டும் சில காட்சிகள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கும். அது அழகிய பெண்களாக இருந்தாலும் சரி, க்யூட் குழந்தைகளாக இருந்தாலும் சரி அந்த புகைப்படங்கள் அந்த ஒரு வாரத்திற்கு நெட்டிசன்களால் ட்ரெண்ட் செய்யப்படும். 


அந்த வகையில் இப்போதைய ட்ரெண்ட்தான் இந்த சேப்பல் டவுன் என்ற ஷாம்பெயின். முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இன்னாள் கேப்டன் ரோகித் சர்மா வரை ஷாம்பெயின்களை வைத்து குழுக்கில் மற்றவர்களை குளிக்க வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அந்த புகைப்படங்களும் இணையத்தை இந்த வாரம் வரை ஆதிக்கம் செய்தது. 


அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்திய அணி தொடரை வெல்ல காரணமாய் இருந்தவர் ரிஷப் பண்ட். தொடரின் வெற்றிக்கு பிறகு ரிஷப் ஆட்டநாயகனாக தேர்வானார். அந்த நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஷாம்பெயினை முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு வழங்கினார். அந்த வீடியோவும் கடந்த சில நாட்களை ஆட்கொண்டது. அப்படிப்பட்ட சேப்பல் டவுன் என்ற ஷாம்பெயின் விபரத்தை பார்க்கலாம். 


சேப்பல் டவுன் (ஷாம்பெயின்) :


சேப்பல் டவுன் ஒயின் ஆலை கென்ட் கிராமப்புறத்தின் மையத்தில் அமைந்துள்ள டெண்டர்டன் என்ற அழகிய நகரத்தில் அமைந்துள்ளது. பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி முழு அளவிலான ஆங்கில வண்ணமயமான ஒயின்களை நாங்கள் உற்பத்தி செய்கின்றனர். கிட்டத்தட்ட 350 ஆண்டுகால விதிகள் மற்றும் மரபுகளின் அடிப்படைகளில் இவை தயாரிக்கப்படுகின்றனர் என்றும், தென்கிழக்கு இங்கிலாந்தில் இருந்து பெறப்பட்ட பழங்களால் சேப்பல் டவுன் ஒயின்கள் தயாரிக்கப்படுகின்றன. 


இங்கிலாந்தை பொறுத்தவரை சேப்பல் டவுன் பிராண்ட்கள்தான் நம்பர் 1. இதன் காரணமாகவே இந்திய அணி வெற்றி கொண்டாட்டில் சேப்பல் டவுன் பிராண்ட் அதிகம் கவனம் பெற்றது. இங்கிலாந்து மதிப்பில் பவுண்ட் $168.00 என்று ஆன்லைனில் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 14,000 ரூபாய். 


நிச்சயமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு கொடுத்தது இதைவிட காஸ்டிலியாகதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகமொத்தம் மொத்த இந்திய அணி வெற்றி களிப்பில் குளித்தது ஆயிரம் ஆயிரத்தில்தான்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண