நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் இரண்டும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் இந்த போட்டியை எப்போது, எங்கே, எப்படி நேரலையில் பார்ப்பது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே காணலாம்.
பாகிஸ்தானின் இறுதி வாய்ப்பு?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஆறாவது போட்டியில் நியூசிலாந்து வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. NZ vs BAN மோதல் நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக உள்ளது.. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் போட்டியில் வெளியேற்றப்படும் அதே வேளையில், இந்தியாவும் நியூசிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
போட்டி தொடங்கும் நேரம்:
இந்த போட்டியானது பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கிறது.
மைதானம் எப்படி?
ராவல்பிண்டி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக மைதானமாகும், சீரான பவுன்ஸ் மற்றும் வேகத்தை வழங்குகிறது, இதனால் பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையுடன் ஆக்ரோஷமான ஸ்ட்ரோக்குகளை விளையாட முடியும். இதனால் இந்த போட்டியும் ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியாக அமையும் என்று எதிர்ப்பார்க்கபபடுகிறது. இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோர் 280 ஆக உள்ளது.
இதையும் படிங்க:Viral Video: பாகிஸ்தானில் முடியும், இந்தியாவில் சாத்தியமா? விளையாட்டை விழுங்கிய அரசியல்? வைரல் வீடியோ
நேருக்கு நேர்
வங்கதேசமும் நியூசிலாந்தும் இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் 11 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது, 33 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த இரண்டு அணிகளும் கடைசியாக டிசம்பர் 2023 இல் நேருக்கு நேர் மோதின. அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 32வது ஓவரில் 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை அடுத்து, வங்கதேசம் அந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேரடி ஒளிபரப்பு:
NZ vs BAN போட்டி இந்தியாவில் JioHotstar செயலி மற்றும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: Ind vs Pak : சர்ப்ரைஸ் எங்க சார்? பாகிஸ்தான அணி பயிற்சியாளரை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..
உத்தேச அணி விவரம்:
நியூசிலாந்து:
டெவன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூர்க்
வங்கதேசம்:
தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்/மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், ஜேக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப்,/நஹித் ரமேத்னா,/நஹித் ரமேத்