ஐபிஎல் தொடருக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்புக்கு பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது.
இரண்டாவது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கிலும் சென்னை அணியின் ஆதிக்கமே தொடர்ந்து கோப்பையை கைப்பற்றியது. பின்னர், 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு, கர்நாடகா அணியும் 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் வென்றது. கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை மும்பை அணி கைப்பற்றியது.
இதையடுத்து, கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகளாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடத்தப்படாத நிலையில், இந்தாண்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, மொத்தம் 19 போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது.
ஜெய்ப்பூர், ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடைபெறும் தொடரில் போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், சென்னை ரைனோஸ், கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், பஞ்சாப் டி ஷேர், தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.
இன்று நடைபெற்ற முதல் போட்டியில், பெங்கால் டைகர்ஸை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.
அணி நிலவரம்:
பெங்கால் டைகர்ஸ்: உதய், இந்திரசிஷ், மோகன், சுமன், ஜாய், ஜோ, யூசுப், ஜீது கமல், ஜம்மி, ரத்னதீப் கோஷ், ஆனந்த சவுத்ரி, சாண்டி, ஆதித்யா ராய் பானர்ஜி, அர்மான் அகமது, மாண்டி, ராகுல் மஜூம்தார், கௌரவ் சக்ரபர்த்தி, போனி, மற்றும் சவுர் தாஸ்.
கர்நாடகா புல்டோசர்ஸ்: பிரதீப், ராஜீவ் எச், சுதீப் கிச்சா, சுனீல் ராவ், ஜெய்ராம் கார்த்திக், பிரதாப், பிரசன்னா, சிவ ராஜ்குமார், கணேஷ், கிருஷ்ணா, சவுரவ் லோகேஷ், சாந்தன், அர்ஜுன் யோகி, நிருப் பண்டாரி, நந்த கிஷோர், மற்றும் சாகர் கவுடா.
இரண்டாவது போட்டியில், சென்னை, மும்பை அணிகள் மோதின. இரண்டு அணிகளும் தற்போது விளையாடி வருகிறது.
மும்பை ஹீரோஸ்: சுனில் ஷெட்டி, அஃப்தாப் ஷிவ்தாசானி, சோஹைல் கான், பாபி தியோல், ஜெய் பானுஷாலி, சாகிப் சலீம், ஷபீர் அலுவாலியா, ராஜா பெர்வானி, ஷரத் கெல்கர், அபூர்வா லக்கியா, சமீர் கோச்சார், சித்தந்த் முலே, மாதவ் தியோசகே, வதர்ட்ஷால், வதர்ட்ஷால், பாலகிருஷ்ணா, ரஜ்னீஷ் துகாலி, நிஷாந்த் தஹியா, நவ்தீப் தோமர், சந்தீப் ஜுவத்கர், ஜதின் சர்னா மற்றும் அமித் சியால்
சென்னை ரைனோஸ்: ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, விக்ராந்த், சாந்தனு, பிருதிவி, அசோக் செல்வன், கலை அரசன், மிர்ச்சி சிவா, பரத் நிவாஸ், ரமணா, சத்யா, தசரதன், சரண், ஆதவ், பாலசரவணன்.