பார்டர் கவாஸ்கர் டிராபி வருகிற 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் அனைத்தும் விராட் கோலியை அனைத்து விளம்பரங்களிலும் முன்னிலை படுத்தபடுத்துவதால் கேப்டன் ரோகித் சர்மா ஓரங்கட்டபடுகிறாரா எனறு  கேள்வி எழுந்துள்ளது. 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் அங்கு தங்களது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஊடகங்கள் விராட் கோலியின் புகைப்படத்தை செய்திதாளின் முன்பக்கத்தில் போட்டு கொண்டாடி வருகின்றனர். தி டெய்லி டெலிகிராஃப் (The Daily Telegraph) என்ற செய்திநாளில் கோலியின் படத்தை முன்பக்கத்தில் போட்டுள்ளனர். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதையும் படிங்க: Ricky Ponting : ”சிடு சிடு மூஞ்சி கம்பீர்” பாண்டிங்கின் தரமான பதிலடி


ஏன் விராட் கோலி? 


பொதுவாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் யார் மிகவும் பிரபலமான வீரரோ அவரின் புகைப்படத்தை தங்களின் அட்டைப்படங்களில் போடுவது வழக்கம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் மத்தியில் விராட் கோலி மிகவும் பிரபலமானவராக உள்ளார். குறிப்பாக விராட் கோலி தான் 2014 ஆம் ஆண்டில் இருந்த ஆஸ்திரேலிய மண்ணில் பல சதங்களை அடித்து குவித்துள்ளார். 2014 டெஸ்ட் தொடரின் போது ரன் மழை பொழிந்து தள்ளினார். அதன் பிறகு 2017-18 ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அப்போது இந்திய கேப்டனாக விராட் கோலி செயல்பட்ட விதத்தை ஆஸ்திரேலிய ஊடகங்கள் பெரிதும் பாராட்டின. இது மட்டுமில்லாமல் 2019 ஆம் ஆண்டு நடந்த  ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதின, அப்போது ரசிகர்கள் ஸ்டீவன் ஸ்மித்தை கேலி செய்த போது ரசிகர்களிடம் அவ்வாறு செய்யக்கூடாது என்று விராட் கோலி அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்த மாதிரியான காரணங்களால் தான் விராட் கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன.


 






கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்: 


தற்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தான். ஆனால் பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோகித் சர்மாவின் புகைப்படத்தை வைக்காமல் கோலியின் படத்தை வைப்பது சரியில்லை என்றும் கேப்டன் ரோகித் சர்மாவை ஓரங்கட்டப்பட்ட பார்க்கிறார்களா என்ற  கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.