இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார். தென்னாப்பிரிக்க தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் தற்போது விராட் கோலி ஆடி முடித்துள்ளார். இந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியானது. அதேபோல், தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் இருந்து ஓய்வு கேட்டிருப்பதாக பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. முன்னதாக, கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதேபோல், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அணிக்கு திரும்புவாரா விராட் கோலி?
இந்நிலையில் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் விராட் கோலி 3-வது டெஸ்டில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விலகியது தனிப்பட்ட காரணம் என்ற பிசிசிஐ கூறியாதால் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (WK), துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா ,அவேஷ் கான், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார்.
மேலும் படிக்க:IND vs ENG Test: இந்திய அணியை ஒயிட் வாஷ் முறையில் வீழ்த்துவோம்.. இங்கிலாந்து வீரரின் பேச்சு