இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி வீரர், வீராங்கனைக்கு டெஸ்ட் போட்டிக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






பாலின பாகுபாட்டை களையும் நடவடிக்கையின் முதல்படியான ஒரே மாதிரி ஊதியம் வழங்கப்பட போவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிசிசிஐ மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அவர்களது ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் போட்டிக் கட்டணமே வழங்கப்படும். டெஸ்ட் (ரூ. 15 லட்சம்), ஒருநாள் (ரூ. 6 லட்சம்), டி20 (ரூ. 3 லட்சம்). சம ஊதியம் என்பது நமது பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு எனது அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் ஆதரவிற்கு நான் அபெக்ஸ் கவுன்சிலுக்கு நன்றி கூறுகிறேன். ஜெய் ஹிந்த்.” என பதிவிட்டுள்ளார்.