BCCI Contract: ஒரே ஒரு ஃபார்மெட்... குறைந்த சம்பளம்! கோலி-ரோகித்துக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி.
கோலி மற்றும் ரோகித் இருவரும் தற்போது ஒருநாள் சர்வதேச (ODI) வடிவத்தில் மட்டுமே விளையாடுவதால் இருவரையும் A+பிரிவில் இருந்த இருவரையும் தற்போது பி பிரிவுக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மத்திய ஒப்பந்தப் பிரிவை நீக்கி, கோஹ்லி மற்றும் ரோகித்தை கிரேடு B வகைக்கு மாற்றியுள்ள நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
ரோகித் மற்றும் கோலி:
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர், ஆனால் இருவரும் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர், இந்த நிலையில் தான் இருவரின் மத்திய ஒப்பந்தத்தில் பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது, A+பிரிவில் இருந்த இருவரையும் தற்போது பி பிரிவுக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மாற்றத்திற்கான காரணம்:
இதற்குக் காரணம் கோலி மற்றும் ரோகித் இருவரும் தற்போது ஒருநாள் சர்வதேச (ODI) வடிவத்தில் மட்டுமே விளையாடுவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், ஷுப்மான் கில் (இந்தியாவின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இப்போது கிரேடு A பிரிவில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
BCCI-யின் புதிய மத்திய ஒப்பந்தப் பட்டியல்
பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பிரிவுகள், ஒரு வழக்கமான தேசிய அணி வீரருக்கு ஆண்டுக்கு எவ்வளவு சம்பளம் (போட்டிக் கட்டணத்தைத் தவிர) வழங்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கின்றன. முன்னதாக, கிரேடு ஏ+ பிரிவு ஆண்டுக்கு ரூ.7 கோடியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து கிரேடு ஏ, பி மற்றும் சி பிரிவுகள் முறையே ரூ.5, 3 மற்றும் 1 கோடி செலுத்தின. BCCI-யின் புதிய மத்திய ஒப்பந்தப் பிரிவு தற்போது இப்படி தான் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிரேடு ஏ : ஜஸ்பிரித் பும்ரா , சுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா
கிரேடு பி : வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா , ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் , யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர்
கிரேடு சி : அக்சர் படேல் , திலக் வர்மா , ரிங்கு சிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா , சாய் சுதர்ஷன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட்





















