ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார், அவர் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார், அவர் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார், அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார். குடும்பக் கடமைகள் காரணமாக ரோஹித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 ரஞ்சி டிராபியில் விளையாடுவதற்காக அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல், ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். 


டெஸ்ட் அணியில் உனத்கட் திரும்பியதை தவிர எந்த மாற்றமும் இல்லை. இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். அதேசமயம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


3 மற்றும் 4வது டெஸ்ட்  போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்: 


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், சட்டீஸ்கர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் 


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 


டெஸ்ட் தொடர்:


மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட் (ஹோல்கர் மைதானம் - மத்திய பிரதேசம்)
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட் (நரேந்திர மோடி மைதானம் - அகமதாபாத்)


ஒருநாள் தொடர்:


மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி (மும்பை வான்கடே மைதானம்)
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி (டாக்டர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம்)
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி (எம்ஏ சிதம்பரம் மைதானம் - சென்னை)