வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இன்று டி20 போட்டியில் விளையாடியது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதலாவது போட்டி, சாட்டோகிராமில் உள்ள ஜஹர் அகமத் மைதானத்தில் நடைபெற்றது. 


டாஸ் வென்ற வங்காள தேச அணி பந்து வீச தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க வீரர்களான பட்லரும் சால்ட்டும் சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. போட்டி இங்கிலாந்தின் வசமிருந்து வங்காளதேச வசத்திற்கு கடைசி ஐந்து ஓவர்களில் வந்தது. 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி சார்பில் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகள் வீழ்த்தினர். 


அதன் பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வங்கதேச அணி முன்னிலை பெற்றுள்ளது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை மிகச் சிறிய அணியான வங்காள தேசம் வீழ்த்தியது மிகவும் சிறப்பான வெற்றியாக வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் பார்க்கப்படுகிறது.