மேலும் அறிய

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர்! போலீஸ் சோதனையில் கைது... ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்

மாருப்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையில், அவரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.104 ஆக இருந்தது தெரியவந்தது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிட்னியின் மாருப்ரா பகுதியில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த டேவிட் வார்னர், போலீசாரைக் கண்டதும் தனது வேனை சோதனை மையத்திற்கு சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

முதற்கட்ட சோதனையில் வார்னர் மது அருந்தியது உறுதியானது. இதையடுத்து, மாருப்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையில், அவரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.104 ஆக இருந்தது தெரியவந்தது. இது ஆஸ்திரேலிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு அதிகம் என்பதால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்:

கைது செய்யப்பட்ட டேவிட் வார்னர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸுடன் விடுவிக்கப்பட்டார். வரும் மே 7-ம் தேதி சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ளார்

பிஎஸ்எல் தொடர் பாதிக்குமா?

தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். மூன்று வெற்றிகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது. தனிப்பட்ட காரணத்திற்காக ஆஸ்திரேலியா வந்திருந்தபோது வார்னர் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று கூறப்பட்டாலும், இந்த விவகாரம் அவரது தொழில்முறை வாழ்க்கையில் பெரிய கரும்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.

தொடரும் சர்ச்சை:

கிரிக்கெட் களத்தில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், சர்ச்சைகளுக்கும் வார்னருக்கும் நீண்ட காலப் பந்தம் உண்டு. 2018-ம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டது, 2013-ல் ஜோ ரூட்டைத் தாக்கியது என வார்னரின் கேரியர் பல சர்ச்சைகளைக் கடந்து வந்துள்ளது. இப்போது இந்த மதுபோதை கைது சம்பவம், அவரது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget