ஆஸ்திரேலியா ஓமனுக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற வேண்டும். மேலும், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.
T20 WorldCup: ஆஸி., வந்த சோதனை.. காங்காரு பாய்ஸை கதறவிட்ட குட்டி, சுட்டீஸ் - அயர்லாந்துக்கு காவடி, சூப்பர் 8..
Aus T20 WorldCup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியுடனான படுதோல்விக்குப் பிறகும், ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்புள்ள சூழல் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Aus T20 WorldCup: ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற ஆஸ்திரேலிய அணி, தற்போது அயர்லாந்து போட்டியின் முடிவுகளை நம்பியுள்ளது.
ஆஸ்திரேலியா படுதோல்வி
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை பயணத்தை நெதர்லாந்து அணிக்கு எதிரான அபாரமான வெற்றி மூலம், ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கத்துக்குட்டியான ஜிம்பாப்வே அணியிடம், தனது இரண்டாவது லீக் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தது. இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கம்பேக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, அதிராடியான பேட்டிங் மூலம் நேற்றைய போட்டியில் 181 ரன்களை குவித்தது. ஆனால், பதும் நிசங்காவின் அதிரடியான சதம், அவருக்கு உறுதுணையாக குசால் மெண்டிஸ் விளாசிய அரைசதம் மூலம் 18 ஓவர்கள் முடிவிலேயே இலங்கை அணி இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி கண்டு ஆஸ்திரேலிய அணி பரிதாப நிலையில் உள்ளது.
க்ரூப் பி பிரிவு புள்ளிப்பட்டியல் - ஆஸ்திரேலியா பரிதாபம்
விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணி, இந்த பிரிவில் இருந்து முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது யார்? என்பதில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
| இலங்கை | 3 | 3 | 0 | 6 | 2.462 |
| ஜிம்பாப்வே | 2 | 2 | 0 | 4 | 1.984 |
| ஆஸ்திரேலியா | 3 | 1 | 2 | 2 | 0.414 |
| அயர்லாந்து | 3 | 1 | 2 | 2 | 0.150 |
| ஓமன் | 3 | 0 | 3 | 0 | -4.546 |
நாக்-அவுட்டில் ஆஸ்திரேலியா - அயர்லாந்துக்கு காவடி
தற்போது, பல்வேறு சூழல்கள் மற்றும் கணக்கீடுகளின் அடிப்படையில் மட்டுமே, ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதற்கட்டமாக, வரும் 20ம் தேதி நடைபெற உள்ள ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வலுவான வெற்றியை பதிவு செய்து, 2 புள்ளிகளை பெறுவதோடு ரன் ரேட்டையும் அதிகரிக்க வேண்டும். அதன்பிறகு ஜிம்பாவே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு மீதமுள்ள போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பு உறுதி செய்யப்படும். குறிப்பாக இன்றைய அயர்லாந்து Vs ஜிம்பாவே போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியாவின் நிலை உறுதியாகிவிடும். எனவே இந்த போட்டியில் அயர்லாந்து வெல்ல வேண்டுமென, ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கான வாய்ப்புகள் என்ன?
- ஜிம்பாப்வே அணி தங்களுக்கு மீதமுள்ள இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில், ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே 6 புள்ளிகளை எட்டி ஆஸ்திரேலிய அணியை தொடரிலிருந்தே வெளியேற்றும்
- ஒருவேளை ஜிம்பாவே அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று, ஆஸ்திரேலிய அணி ஓமன் அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் இரண்டு அணிகளும் 4 புள்ளிகளுடன் சமநிலையை எட்டும். அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவிற்கான வாய்ப்பு என்பது முற்றிலும் ரன் ரேட்டையே சார்ந்து இருக்கும்.
- ஒருவேளை தனது கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை அயர்லாந்து வீழ்த்தினால், அந்த அணியும் 4 புள்ளிகளை எட்டும். அப்போதும் இந்த பிரிவிலிருந்து இரண்டாவதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணி யார் என்பதை ரன் ரேட் தான் தீர்மானிக்கும்
- எனவே, ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது
- அதேநேரம், இரண்டு தோல்விகள் மட்டுமின்றி ஏதேனும் ஒரு போட்டியில் ஜிம்பாப்வே அணி மிகப்பெரிய தோல்வியையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது
மேற்குறிப்பிடப்பட்ட சாதகங்கள் மிகவும் அரியதாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். ஏதேனும் ஒன்று தவறினாலும், 2009ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் தாயகம் திரும்ப வேண்டி இருக்கும்.
Frequently Asked Questions
ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?
ஜிம்பாப்வே அடுத்த சுற்றுக்கு செல்ல என்ன வாய்ப்புகள் உள்ளன?
ஜிம்பாப்வே மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால், 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். இரண்டு போட்டிகளிலும் தோற்றால், ரன் ரேட்டைப் பொறுத்து வாய்ப்பு அமையும்.
அயர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா?
அயர்லாந்து தனது கடைசிப் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தினால், 4 புள்ளிகளுடன் சமநிலையில் நிற்கும். அதன் பிறகு ரன் ரேட்டைப் பொறுத்தே அடுத்த சுற்று வாய்ப்பு அமையும்.
ஆஸ்திரேலியா இதுவரை எத்தனை போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது?
ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.





















