ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் முழங்கை காயத்தில் இருந்து மீண்டுள்ளார். தற்போது, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான வரும் வெள்ளி கிழமை நடைபெறும் போட்டிக்கான டேவிட் வார்னர் மும்பை வந்துள்ளார். 


டெல்லியில் நடந்த 2வது டெஸ்டின்போது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மீதமுள்ள பார்டர் - கவாஸ்கர் டிராபியின் பாதி தொடரில் இருந்து வார்னர் விலகினார். காயத்தில் இருந்து மீண்ட வார்னர் இந்தியா வந்து  மும்பை டிராஃபிக்கில் காத்திருந்தபோது காரில் அமர்ந்திருக்கும் செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் தலைப்பில், “வெளியே என பதிவிடப்பட்டு இருந்தது.  அந்த புகைப்படத்தில் அவரது ரசிகர்கள் சிலர் வேறு வாகனத்தில் இருந்து போஸ் கொடுத்துள்ளனர்.






அதேபோல், தெருக்களில் இறங்கி டேவிட் வார்னர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படமும் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 






கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வார்னர் மூன்று இன்னிங்ஸ்களில் பேட் செய்ய முடியாமல் திணறினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்னும் இரண்டு மாதங்களில் மோத இருக்கின்றன. இந்திய அணிக்கு எதிராக டேவிர் வார்னர் திணறிய போதிலும் ஆஸ்திரேலிய அணியும், அந்த அணியின் பயிற்சியாளரும் வார்னர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். 


இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக்டோனால்ட் தெரிவிக்கையில், “ டேவிட் வார்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான எங்களது திட்டத்தில் முழுமையாக இருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு அவர் திரும்பியுள்ளார். அவர் காயத்தில் இருந்து தற்போது முழுமையாக மீண்டுவிட்டார். எனவே வருகின்ற மார்ச் 17ம் தேதி டேவிட் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சியில் பார்க்கலாம்.


இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒருநாள் தொடரில் இல்லாமல் இருக்கிறார், ஏனெனில் அவர் தனது தாயின் மரணத்தைத் தொடர்ந்து வீட்டிலேயே இருக்க முடிவு செய்துள்ளார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வழிநடத்திய ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.