இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஆசியா கோப்பை நடத்துவதற்கான நாடு முடிவாகாத நிலையில், பாகிஸ்தான் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும், மற்ற போட்டிகளை வேறு நாட்டில் நடத்தவும் பாகிஸ்தானால் கோரப்பட்ட, ஹைப்ரிட் மாடல் ஐடியாவிற்கு மற்ற நாடுகள் ஒப்புதல் அளிக்கவில்லை. வங்காளதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அனைத்தும் இந்த ஹைப்ரிட் மாடலை நிராகரித்தன. இதற்காக அந்த நாடுகள் பயண தூரம் மற்றும் நிதி காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளன. அதாவது ஆசிய கோப்பை ஒரு நாட்டில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று அவை கூறுகின்றன. ஆனால் பாகிஸ்தானோ, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போட்டியில் இருந்து விலகுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆசியக்கோப்பை நடக்குமா?


ஆசியக்கோப்பை நடக்கும் என்று முதலில் முடிவு செய்யபட்ட பாகிஸ்தானில் விளையாட இந்தியா தொடர்ந்து மறுத்ததால், அந்த நாடு ஒரு ஹைப்ரிட் மாடலை முன்மொழிந்தது. இதில் பாகிஸ்தானின் 3-4 போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த பரிந்துரைத்தது, மீதமுள்ள போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடத்தலாம் என்று கூறியதும். ஆனால் அவர்களின் பரிந்துரை நிராகரிக்கப்பட்ட பிறகு, ஆசிய கோப்பை நடக்குமா என்ற ஆபத்தில் உள்ளது, குறிப்பாக பாகிஸ்தான் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தால் அதிலும் பல பின்னடைவுகள் உண்டு.



ஆசிய கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகினால், என்னாகும்?


ஒளிபரப்பாளர்கள் பின்வாங்கலாம்


பாகிஸ்தான் இல்லாத பட்சத்தில், ஆசிய கோப்பை இலங்கையிலோ அல்லது மற்ற நாடுகளிலோ தொடரலாம். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும், அப்போதும் அதற்கு ஆசிய கோப்பை என்று பெயரிடலாம். ஆனால் இதில், பாகிஸ்தான் இல்லாததால், ஒளிபரப்பாளர்கள் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் மோதல் அனைத்து முக்கிய போட்டிகளிலும் முதன்மையான போட்டியாகும். எனவே பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் அது ஒளிபரப்பாளர்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். 


தொடர்புடைய செய்திகள்: Rohit Sharma: ஓய்வு எப்போது என அதிரடியாக அறிவித்த ரோகித் சர்மா.. இந்தியாவின் அடுத்த கேப்டன் யார்?


இந்தியாவில் நான்கு நாடுகள் கொண்ட தொடர்


ஆசிய கோப்பை நடத்தப்படாவிட்டால், ஆசிய கோப்பை நடக்கவிருந்த நாட்களில், இந்தியாவில் நான்கு அல்லது ஐந்து நாடுகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் அதில் பங்குகொள்ளும் வாய்ப்புள்ளது. சமீப வருடங்களில் காணப்படாத பழைய முத்தரப்பு தொடர் போல இது இருக்கும். உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசிய அணிகளுக்கு இது ஒரு நல்ல தயாரிப்பாக இருக்கலாம். ஏனென்றால் உலகக் கோப்பை இந்தியாவில் மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பித்தக்கது.



அணிகள் இருதரப்பு தொடருக்கு நகர்வார்கள்


ஆசிய கோப்பை நடத்தப்படாவிட்டால் பெரும் ஏமாற்றம் ஆகும், இருப்பினும் அது வேறு வகையில் பூர்த்தி செய்யப்படும். ஆசியகோப்பைக்காக நாட்களை ஒதுக்கி வைத்த அணிகள், ODI உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், இருதரப்பு தொடர்களில் விளையாட உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகளுடன் இணைய வாய்ப்புள்ளது. ODI உலகக் கோப்பைக்கான இலங்கையின் நிலை இன்னும் உறுதியாகாததால், எதிர்வரும் தகுதிச் சுற்றுகளில் உலகக் கோப்பை வாய்ப்பை உறுதிப்படுத்துவது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். பாகிஸ்தான் தவிர்த்து, ஆசியக் கோப்பை ஆடவுள்ள இந்தியா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.