ஆசியக் கோப்பை என்பது ஆசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிரபலமான கிரிக்கெட் போட்டியாகும். இந்த தொடரையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) நடத்துகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் தள்ளிப்போன ஆசியக் கோப்பை தொடர் 2022ம் ஆண்டு நடந்தது. இதில், ஆறு அணிகள் பங்கேற்று இலங்கை அணி கோப்பையை வென்றது.
இந்தநிலையில், இந்தாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடக்க இருக்கிறது.
ஆசியக்கோப்பை முதல் போட்டியானது 1984 ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது. இதில், இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தநிலையில், 1984 முதல் 2022 வரையிலான ஆசியக் கோப்பையின் ஒவ்வொரு பதிப்பிலும் யார் வெற்றி பெற்றார்கள்..? இரண்டாம் இடம் பிடித்த அணி என்ன..? எந்த நாடு நடத்தியது..? என்ற முழுவிவரத்தை கீழே காணலாம்...
ஆண்டு | வெற்றி பெற்ற அணி | ரன்னர் அப் | நடத்திய நாடு |
1984 | இந்தியா | இலங்கை | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
1986 | இலங்கை | பாகிஸ்தான் | இலங்கை |
1988 | இந்தியா | இலங்கை | வங்கதேசம் |
1991 | இந்தியா | இலங்கை | இந்தியா |
1995 | இந்தியா | இலங்கை | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
1997 | இலங்கை | இந்தியா | இலங்கை |
2000 | பாகிஸ்தான் | இலங்கை | வங்கதேசம் |
2004 | இலங்கை | இந்தியா | இலங்கை |
2008 | இலங்கை | இந்தியா | பாகிஸ்தான் |
2010 | இந்தியா | இலங்கை | இலங்கை |
2012 | பாகிஸ்தான் | வங்கதேசம் | வங்கதேசம் |
2014 | இலங்கை | பாகிஸ்தான் | வங்கதேசம் |
2016 | இந்தியா | வங்கதேசம் | வங்கதேசம் |
2018 | இந்தியா | வங்கதேசம் | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
2022 | இலங்கை | பாகிஸ்தான் | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
அதிகபட்சமாக இதுவரை இந்திய அணி 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. அதே சமயம் இலங்கை அணி 6 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மீதமுள்ள மூன்று நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகியவை ஆசிய கோப்பையில் இன்னும் வெற்றியைப் பெறவில்லை.
குழு | வெற்றி | இரண்டாம் இடம் | வெற்றி பெற்ற ஆண்டு |
---|---|---|---|
இந்தியா | 7 | 3 | 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018 |
இலங்கை | 6 | 6 | 1986, 1997, 2004, 2008, 2014, 2022 |
பாகிஸ்தான் | 2 | 3 | 2000, 2012 |
பங்களாதேஷ் | இதுவரை இல்லை | 3 | இதுவரை இல்லை |
ஆப்கானிஸ்தான் | இதுவரை இல்லை | இதுவரை இல்லை | இதுவரை இல்லை |
ஹாங்காங் | இதுவரை இல்லை | இதுவரை இல்லை | இதுவரை இல்லை |
ஆசியக் கோப்பை 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டதில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் பின்னர் 1986ஆம் ஆண்டு இலங்கை ஆசியக் கோப்பை வென்றது. இதற்குப் பிறகு, 1988, 1990 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் நடந்த அடுத்த 3 ஆசிய கோப்பைகளை இந்தியா வென்றது. கடைசியாக கடந்த 2022 ம் ஆண்டு தசுன் சனக தலைமையிலான இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது.