டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூசிலந்து, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தற்போது அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதன்படி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 2 ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தலா 2போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளனர். 


ஆகவே நாளை நடைபெற உள்ள ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்து போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தால் அந்த இரு அணிகளும் தலா 3 வெற்றியுடன் இருப்பார்கள். இதைத் தொடர்ந்து இந்திய அணி வரும் திங்கட்கிழமை நடைபெறும் போட்டியில் நமீபியா அணியை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணியும் 3 வெற்றியுடன் இருக்கும். இதைத் தொடர்ந்து எந்த அணி அதிகமான ரன் ரேட் வைத்திருக்கிறதோ அந்த அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். எனவே நாளைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியின் அரையிறுதி கனவு பிரகாசமாகும். 


 






இந்நிலையில் நாளை போட்டி நடப்பதற்கு முன்பாக இந்திய அணியின் ரசிகர்கள் நியூசிலாந்து-ஆஃப்கானிஸ்தான் போட்டி தொடர்பாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலும் இந்திய ரசிகர்கள் அனைவரும் நாளை உங்களின் பின் உள்ளோம். நீங்கள் நிச்சயம் நியூசிலாந்து அணியை வீழ்த்தலாம் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் இந்திய ரசிகர்கள் நாளை ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கானிற்கு பெருமளவில் ஆதரவு அளிப்பார்கள் என்று குறிப்பிடும் வகையிலும் மீம்ஸ் படங்கள் உள்ளன. 


 






 






 






 






 






 






 






 






இவ்வாறு பலரும் தங்களுடைய ஆதரவு மீம்ஸ்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க:ஒரு ஹார்ட் எமோஜி..! காதலி இவர்தான் என ஊருக்குச் சொன்ன கிரிக்கெட்டர் கே.எல்.ராகுல்!!