ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே லண்டன் ஸ்பிரிட் என்ற டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார்.  ஆனால் அவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாததால், பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


 






இதுதொடர்பாக அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "லண்டன் ஸ்பிரிட் ஆண்கள் தலைமை பயிற்சியாளர் ஷேன் வார்ன் லார்ட்ஸில் நடைபெறும் தெற்கு பிரேவ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார்.


"இன்று காலை உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, ஷேன் வார்னேவுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.


" அணியின் மற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.எந்த வீரர்களும் பாதிக்கப்படவில்லை."


51 வயதான முன்னாள் ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஷேன் வார்னே, 1992 மற்றும் 2007 க்கு இடையில் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.