இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு நடைபெற்ற பாரா பளுதூக்குதல் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் சார்பில் களமிறங்கிய சுதிர் 217 கிலோ கிராம் எடையை தூக்கி 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இது புதிய உலக சாதனை ஆகும்.






இந்தியா இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.


பாரா பவர்லிப்டிங் பிரிவில் இந்திய வீரர் சுதிர், நைஜீரிய வீரர் ஒபிசுக்வூ, ஸ்காட்லாந்து வீரர் யூலே உள்பட 8 வீரர்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் இந்திய வீரர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். அவருக்கு நைஜீரிய வீரர் ஒபிசுக்வி மட்டம் நெருக்கடி அளித்தார்,


முதல் முயற்சியில் இந்திய வீரர் சுதிர் 208 கிலோ எடையை தூக்கினார். 2வது முயற்சியில் 212 கிலோ தூக்கினார். மூன்றாவது முயற்சியில் 217 கிலோ தூக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும், 134.5 புள்ளிகள் பெற்றார். இந்திய வீரருடன் போட்டி போட்டி நைஜீரிய வீரர் முதல் முயற்சியில் 190 கிலோவும், இரண்டாவது முயற்சியில் 197 கிலோவும் தூக்கி மூன்றாவது முயற்சியில் 203 கிலோ தூக்கும் முயற்சியில் தோல்வியை தழுவினார். அவர் 133.6 புள்ளிகள் பெற்றார்.





போட்டி முடிவில் பாரா பவர்லிப்டிங்கில் 134.5 என்ற புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்த சுதிர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு கடும் நெருக்கடி அளித்த நைஜீரிய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்து வீரர் யூலே 130.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். சுதிர் 134.5 புள்ளிகளை பெற்றிருப்பதும் காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றில் புதிய சாதனை ஆகும்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண