இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வீரர் முரளிஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.






இந்த இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


காமன்வெல்த் தொடரில் இந்திய அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.


இந்த போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், பகாமசின் நைரன், தென்னாப்பிரிக்காவின் வூரான், ஜமைக்காவின் தாம்ப்சன் உள்ளிட்ட 12 வீரர்கள் களமிறங்கினர். நீளம் தாண்டுதலில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ஸ்ரீசங்கர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.




இந்த போட்டியில் பகாமஸ் வீரர் நைரனுக்கும், ஸ்ரீசங்கருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் 8.08 மீட்டர் தாண்டினர். ஆனாலும், காற்று புள்ளிகளின் வித்தியாசத்தில் பகாமஸ் வீரர் இந்திய வீரர் ஸ்ரீசங்கரை முந்தினார். இதையடுத்து, பகாமஸ் வீரர் நைரன் தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரர் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.  ஸ்ரீசங்கருக்கு 23 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


தென்னாப்பிரிக்காவின் ஜோவன் வான் வூரான் 8.6 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் முகமது அனீஸ் யாஹியா 7.97 மீட்டர் மட்டுமே தாண்டினார். அவர் 5வது இடத்தைப் பிடித்தார்.   


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண