44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 தேதி வரை சென்னை அருகே நடைபெற இருக்கிறது. இதையடுத்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பொதுபணித்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோர் உள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்