முதல்முறையாக சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது.
200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் பங்கேற்பதற்காக சீனா இன்னும் முன்பதிவு செய்யவில்லை.
கொரோனா காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கின்றனர். ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகளை போர் காரணமாக அங்கு நடத்தப்படமாட்டது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட், 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடந்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் விவரம்:
இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 303 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள்க் பிரிவில் 168 அணிகளும், மகளிர் பிரிவில் 135 அணிகளும் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு நாளையோடு முடிவடைகிறது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.
இந்தனால், சென்னை உலக அளவில் உற்றுநோக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பலரும் இதைக் கவனித்து செஸ் விளையாட்டு மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மறுபுறம் 200 நாடுகளின் வீரர்கள் சென்னைக்கு வர உள்ளதன் மூலம் உலக அளவில் தமிழ்நாடும் சென்னையும் கவனம் பெறும். இதனால் வெளிநாட்டில் இருந்து தொழில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். என கருதப்படுகிறது.